twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாவோயிஸ்டுகளுடன் இணைந்த நேபாள கவர்ச்சி நடிகை ரேகா தாபா

    By Sudha
    |

    Rekha Thapa
    காத்மாண்டு: நேபாள நாட்டின் கவர்ச்சி நடிகை ரேகா தாபா, மாவோயிஸ்டுகளுடன் கை கோர்த்துள்ளார். இதைதனது பேஸ்புக் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    20 வயதுகளில் இருக்கும் ரேகா தாபா, கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்தவர். மிக மிக கவர்ச்சிகரமான உடைகளுடன் படங்களில் தோன்றுபவர். பல்வேறு சூடான சர்ச்சைகளையும் கிளப்பி வருபவர். தற்போது மாவோயிஸ்டுகளின் பிரசார பீரங்கியாக அவர் மாறியுள்ளார்.

    முன்பு முழு முதுகும் தெரிய உடை அணிந்து வந்ததால் இந்து அமைப்பு ஒன்றுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டது. அதேபோல பாலிவுட் நடிகர் சக்தி கபூருடனும் மோதிய அனுபவம் இவருக்கு உண்டு. இப்போது மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார், அவர்களுடன் கரம் கோர்த்துள்ளார்.

    கடந்த ஆண்டுதான் இவர் நேபாள மாவோயிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்படத் தொடங்கினார். இவர் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக பேசும் கூட்டங்களுக்கு பெரும் கூட்டம் வரத் தொடங்கியது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது மாவோயிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் பிரசந்தாவுடன் இணைந்து இவர் டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்தார். இந்தக் காட்சியை மீடியாக்களும், பிரசந்தாவின் மனைவி சீதா தஹாலும் விழிகள் விரிய பார்த்தனர்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் மாவோயிஸ்ட் ஆதரவு இயக்குநர் ஒருவரின் படத்தில் நாயகியாக நடிக்கவும் ரேகா தாபா ஒப்பந்தமானார். ஜெய்லாலா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை இயக்குநர் லமிசானே இயக்கவுள்ளார். கவர்ச்சிகரமான படங்களில் நடித்து வந்த ரேகா தற்போது மாவோயிஸ்ட் ஆதரவு படங்களில் நடிக்க படு தீவிரமாக உள்ளாராம். ஜெய்லாலா படப்பிடிப்பு தொடங்கியபோது அங்கு வந்த மாவோயிஸ்ட் மக்கள் விடுதலைப் படையின் துணைத் தலைவரான நந்த் கிஷோர் புன் பசங், உண்மையான துப்பாக்கியை எப்படி பிடித்து சுட வேண்டும் என்பது குறித்து ரேகாவுக்கு சொல்லிக் கொடுத்தார்.

    ரேகாவின் தீவிர மாவோயிஸ்ட் ஆதரவைப் பார்த்து வியந்து போன மாவோயிஸ்ட் அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவரான சந்திர பகதூர் தாபா சாகர், ரேகாவை தனது தங்கையாக தத்தெடுத்துக் கொண்டார். சகோதரர்கள் தினத்தன்று இந்த தத்தெடுப்பு நடந்தது. அப்போது சாகர் தந்த பரிசுப் பணத்தையும் பாசத்தோடு பெற்றுக் கொண்டார் ரேகா.

    ரேகாவின் வருகையால் மாவோயிஸ்ட் கட்சியினரும் குஷியடைந்துள்ளனர். ரேகாவின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, மாவோயிஸ்ட் கட்சியின் 2ம் நிலை தலைவரான பாபுராம் பட்டாராய், ரேகாவுடன், காத்மாண்டுவில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க வந்ததால் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அப்படம் ரேகா நடித்த யார் எனது இதயத்தைக் கவர்ந்தது என்று பொருள் படும் கஸ்லே சோரயோ மேரா மேன் என்ற தலைப்பைக் கொண்டதாகும்.

    மாவோயிஸ்டுகளை மட்டுமல்லாமல் நேபாள மக்களிடையேயும் ரேகாவின் இந்த தீவிர மாவோயிஸ்ட் ஆதரவு போக்கு பெரும் வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X