»   »  டிரம்ப் அரசை கண்டித்து 200 யு.எஸ். தியேட்டர்களில் திரையிடப்பட்ட நெத்தியடி படம்

டிரம்ப் அரசை கண்டித்து 200 யு.எஸ். தியேட்டர்களில் திரையிடப்பட்ட நெத்தியடி படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவில் 200 தியேட்டர்களில் 1984 படம் திரையிடப்பட்டது.

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் 1984. ஜான் ஹர்ட், ரிச்சர்ட் பர்டன் உள்ளிட்டோர் நடித்த அந்த படம் 1984ம் ஆண்டு ரிலீஸானது.

1984 screened in USA to protest Trump's government

தான் சொல்வது தான் சட்டம், அனைவரும் கீழ்படிய வேண்டும், அயல்நாட்டு எதிரிகளை அரக்கர்களை போன்று சித்திரப்பதுமாக இருக்கும் அரசை அந்த படத்தில் காண்பித்திருப்பார்கள்.

1984 screened in USA to protest Trump's government

அந்த அரசு தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு என்று பலரும் நம்புகிறார்கள். இந்நிலையில் டிரம்ப் அரசை எதிர்க்கும் வகையில் 1984 படம் அமெரிக்காவில் 200 தியேட்டர்களில் நேற்று திரையிடப்பட்டது.

படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரமான வின்ஸ்டன் ஸ்மித்(ஜான் ஹர்ட்) ஏப்ரல் 4ம் தேதி தான் டைரி எழுதத் துவங்குவார். அதனால் நேற்று படம் திரையிடப்பட்டது.

அமெரிக்காவை தொடர்ந்து கனடா, ஸ்வீடன், நியூசிலாந்து, ஹாலந்து, குரோஷியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் டிரம்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 1984 படம் திரையிடப்பட்டது.

Read more about: usa, அமெரிக்கா
English summary
200 theatres showed 1984 movie in the USA on tuesday as a way of protesting president Donald Trump.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil