»   »  மும்பை தொடர் குண்டுவெடிப்பு: நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலையாகும் சஞ்சய் தத்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு: நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலையாகும் சஞ்சய் தத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நன்னடத்தை காரணமாக வருகின்ற மார்ச் மாதம் விடுதலை ஆகிறார்.

கடந்த 1993 ம் ஆண்டில் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஏ கே 56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சஞ்சய் தத் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

1993 Mumbai Blast: Sanjay Dutt to be Freed From Jail in March

இந்த வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சஞ்சய் தத் மகராஷ்டிராவில் உள்ள புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

கோர்ட் விதித்த தண்டனைக் காலம்படி அவர் நவம்பர் மாதம் (2016)வரை சிறையில் இருக்க வேண்டும். ஆனால் சஞ்சய் தத்தின் நன்னடத்தை காரணமாக அடுத்த வருடம் மார்ச் 7 ம் தேதி (2016) விடுதலை செய்யப்படவிருக்கிறார்.

சஞ்சய் தத் மட்டுமல்ல பொதுவாகவே ஜெயில் கைதிகளுக்கு நன்னடத்தை காரணமாக சிறை தண்டனை குறைக்கப்படுவது உண்டு என்று எரவாடா சிறை அதிகாரி பவார் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் மார்ச் மாதம் விடுதலையாகும் பட்சத்தில் அவரின் தண்டனைக்காலம் சுமார் 8 மாதங்கள் வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் தத் விடுதலையாகும் இந்த செய்தி தற்போது ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
1993 Mumbai Serial Blast case: Bollywood Actor Sanjay Dutt to be Freed From Jail in March 7, 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil