»   »  உலக அளவில் ட்ரெண்ட் ஆன 2.0 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!

உலக அளவில் ட்ரெண்ட் ஆன 2.0 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் முதல் தோற்ற வெளியீடு அறிவிப்பு உலக அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் 2.0. ரஜினியுடன் எமி ஜாக்ஸன், அக்சய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் ரூ 350 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்ற பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.

2.0 first look launch announcement becomes worldwide trending

இந்தப் படத்தின் ஒரு ஸ்டில்கூட இதுவரை வெளியாகாத அளவுக்கு ரகசியம் காத்து வருகின்றனர்.

படத்தின் முதல் தோற்ற படம் நாளை மறுதினம் மும்பையில் பிரமாண்ட விழாவில் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நேற்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இந்த அறிவிப்பு நேற்று முழுவதும் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. தமிழ்ப் படம் ஒன்று சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது ஒரு ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

English summary
The first look launch announcement of Rajinikanth's 2.0 has became trending worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil