»   »  செய்தியாளர் மீது தாக்குதல்: இயக்குனர் ஷங்கரின் உறவினர் கைது

செய்தியாளர் மீது தாக்குதல்: இயக்குனர் ஷங்கரின் உறவினர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.0 படப்பிடிப்பின்போது செய்தியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக இயக்குனர் ஷங்கரின் உறவினர் பப்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்று சென்னை திருவல்லிக்கேணியில் படப்பிடிப்பு நடந்தது.

2.0 issue: Director Shankar's relative held

அந்த இடத்தில் படப்பிடிப்பு வாகனங்கள் ஏராளமாக நின்றன. இதை பார்த்த செய்தியாளர் ஒருவர் வாகனங்களை புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த படக்குழுவினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷங்கரின் உறவினர் பப்பு என்பவரை கைது செய்துள்ளனர்.

பப்பு ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai police arrested director Shankar's relative Pappu in the journalist assault case. A journalist was reportedly assaulted in the 2.0 shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil