twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2.0.. அக்‌ஷயை விடுங்க.. இந்தியாவின் நிஜ ‘பக்‌ஷி ராஜன்’ பற்றித் தெரியுமா?

    2.0 படத்தில் வரும் அக்‌ஷய்குமார் கதாபாத்திரம் இந்தியாவின் பறவை மனிதன் என அழைக்கப்படும் சலீம் அலியின் வாழ்க்கையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

    |

    Recommended Video

    2.0 நிஜ பக்‌ஷி ராஜன் சலீம் அலி பற்றி தெரிஞ்சுக்கோங்க... வீடியோ

    சென்னை: 2.0 படத்தில் வரும் அக்‌ஷய்குமார் கதாபாத்திரம் போலவே, நிஜத்திலும் சுமார் 65 ஆண்டுகள் பறவைகளின் காதலராக வாழ்ந்தவர் தான் 'பறவை மனிதர்' சலீம் அலி.

    பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் ரஜினியின் சிட்டி கதாபாத்திரத்திற்கு இணையாகப் பெரிதும் பேசப்பட்டது, வில்லன் பக்‌ஷி ராஜன்.

    இப்படத்தில் சாதுவான வயது முதிர்ந்த பறவைகள் ஆர்வலராகவும், மிரட்டல் ஈவிள் க்ரோவாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் அக்‌ஷய் குமார்.

    பறவை மனிதர் சலீம் அலி:

    பறவை மனிதர் சலீம் அலி:

    இதில், பறவைகள் ஆர்வலராக அக்‌ஷய்யின் கதாபாத்திரம் போலவே, இந்தியாவில் நிஜத்தில் ஒருவர் வாழ்ந்துள்ளார். அவர் இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்படும் சலீம் அலி தான். இவர் தனது வாழ்நாளில் 65 ஆண்டுகளை பறவைகளுக்காகவும், அவற்றை ஆராய்வதற்காகவும், அவற்றை காப்பாற்றுவதற்காகவுமே செலவழித்தார்.

    பொழுதுபோக்கு:

    பொழுதுபோக்கு:

    நவம்பர் 12ம் தேதி, கடந்த 1896ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சலீம் அலி. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தனது மாமா வீட்டில் வளர்ந்த அவருக்கு, வேட்டையாடுவது தான் பொழுதுபோக்காக இருந்துள்ளது.

    பறவைகள் மீது காதல்:

    பறவைகள் மீது காதல்:

    அப்படியாக ஒரு முறை, வீட்டருகே துப்பாக்கியால் சிட்டுக் குருவி ஒன்றைச் சுட்டுவிட்டார். அந்தக் குருவி துடித்து துடித்து இறந்ததைப் பார்த்த சலீம் அலிக்கு மிகவும் வேதனையானது. இனி, வேட்டையாடுவதில்லை என முடிவெடுத்த அவர், பறவைகளைக் காதலிக்கத் தொடங்கினார்.

    பறவைகள் ஆராய்ச்சி:

    பறவைகள் ஆராய்ச்சி:

    பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் கெளரவச் செயலாளராக இருந்த டபிள்யூ. எஸ்.மில்லர்ட் என்பவரிடம் பறவைகள் ஆராய்ச்சிக்கு சேர்ந்தார் சலீம் அலி. சுமார் 65 ஆண்டுகள் பறவைகளைப் பற்றியும், அவற்றின் நலம் குறித்தும் மட்டுமே சிந்தித்தார் அவர், கடந்த 1996ம் ஆண்டு காலமானார்.

    கோவையில் சலீம் அலி:

    கோவையில் சலீம் அலி:

    தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இவரின் பெயரில் பறவைகள் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தன் வாழ்நாள் முழுவதும் பறவைகளுக்காகவே செயல்பட்டதால், அவரை பறவை மனிதர் என அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more about: 2 0
    English summary
    The real brid man of India Salim Ali is the inspiration for Akshay Kumar's Pakshirajan character in 2.0.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X