»   »  இணையதளத்தில் ரஜினியின் 2.0 திரைப்பட டீஸர் லீக்: படக் குழு அதிர்ச்சி

இணையதளத்தில் ரஜினியின் 2.0 திரைப்பட டீஸர் லீக்: படக் குழு அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
2.0 டீசர் லீக் உண்மையில்லை- வீடியோ

சென்னை: இணையதளத்தில் ரஜினியின் 2.0 திரைப்படத்தின் டீஸர் லீக்கானதால் படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் 2.0. இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக இருந்தது.

2.0 teaser leaked in Internet

எனினும் சில தொழில்நுட்ப பணிகள் இருந்ததால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பா.ரஞ்சித்தின காலா படம் வரும் ஏப்ரல் 27-இல் திரைக்கு வருகிறது.

இதனிடையே 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் இன்று இந்த படத்தின் டீஸர் இணையதளத்தில் லீக்கானது.

சுமார் 1.27 நிமிடங்கள் கொண்ட இந்த டீஸரால் படக்குழுவினரும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் படயூனிட்டில் இதுபோல் லீக்கேஜ் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்றும் அத்தனை பாதுகாப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மனதில் உள்ள நிலையில் தற்போது லீக்கானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டீஸரில் ரஜினிகாந்த் கண்ணாடியை கழற்றி விட்டு ஹூஹ்ஹூ என்று பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுபோல் காலா படத்தின் டீஸரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth's 2.0 teaser leaks in online before the team officially releases the teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil