»   »  ஏரியில் மூழ்கி 2 நாட்கள் கழித்து கன்னட நடிகர் உதய்யின் உடல் மீட்பு

ஏரியில் மூழ்கி 2 நாட்கள் கழித்து கன்னட நடிகர் உதய்யின் உடல் மீட்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் அருகே உள்ள ஏரியில் மூழ்கி பலியான 2 கன்னட நடிகர்களில் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

துனியா விஜய் ஹீரோவாக நடித்து வரும் கன்னட படமான மஸ்தி குடியின் கிளைமாக்ஸ் காட்சி பெங்களூர் அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு படமாக்கப்பட்டது.

2 days after mishap actor's body found

விஜய், வில்லன்கள் அனில் மற்றும் உதய் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்தனர். இதில் விஜய் மட்டும் நீந்தி கரை வந்தார். அனிலும், உதய்யும் நீரில் மூழ்கி பலியாகினர்.

அவர்களின் உடல்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் ஆகியோர் உள்ளூர் மீனவர்களின் உதவியோடு தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று உதய்யின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

அனிலின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நீச்சல் தெரியாத அனில் மற்றும் உதய்யை நீரில் குதிக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Body of Uday, one of the actors, who drowned in T G Halli during a shoot has been found by search teams. Teams of NDRF, Fire and safety personnel along with the help of local fishermen had been scouting the T G Halli reservoir waters since Monday evening for bodies of actors Uday and Anil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil