»   »  2 கன்னட நடிகர்கள் பலி: தயாரிப்பாளரை புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்- பொங்கிய நடிகர்கள்

2 கன்னட நடிகர்கள் பலி: தயாரிப்பாளரை புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்- பொங்கிய நடிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படப்பிடிப்பின்போது 2 கன்னட நடிகர்கள் நீரில் மூழ்கி பலியானது குறித்து அறிந்து திரையுலக பிரபலங்கள் கொதிப்படைந்துள்ளனர்.

மஸ்தி குடி கன்னட படப்பிடிப்பின்போது சரியாக நீச்சல் தெரியாத அனில் மற்றும் உதய் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்தனர். அப்போது அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

இந்நிலையில் இது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் கோபம் அடைந்துள்ளனர்.

ஜான் ஆபிரகாம்

ஜான் ஆபிரகாம்

2 கன்னட நடிகர்கள் பலியான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த வீடியோவை பார்த்தேன். இது முட்டாள்தனம். படத்தின் தயாரிப்பாளரை சிறையில் தள்ள வேண்டும் என பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

சோனு சூத்

சோனு சூத்

சண்டை காட்சியில் நடித்தபோது 2 கன்னட நடிகர்கள் பலியான சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியும், கோபமும் அடைந்தேன். நீந்த தெரியாதவர்களை நீரில் குதிக்க வைத்தது படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் செய்த கிரிமினல் வேலை. இதை மன்னிக்கவே முடியாது என பாலிவுட் நடிகர் சோனு சூத் பொங்கியுள்ளார்.

அமலா பால்

மஸ்தி குடி படக்குழுவின் முட்டாள்தனத்தை பார்த்து அதிரிச்சி அடைந்தேன். அனில் மற்றும் உதய்யை இழந்து வாடும் குடும்பத்தாரை நினைத்து கவலையாக உள்ளது என்று அமலா பால் ட்வீட்டியுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ்

கர்நாடகாவில் 2 ஸ்டண்ட் நடிகர்கள் பலியானதை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். மன்னிக்க முடியாத அஜாரக்தையை புரிந்து கொள்ள முடியவில்லை என ஐஸ்வர்யா தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood and Kollywood celebs are shocked to hear the drowning of two Kannada actors while acting in Masti Gudi movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil