வாவ்.. 20 லட்சம் பேரா.. ரம்பாவிடமிருந்து பொங்கி வழிந்த நன்றி.. செம ஹேப்பியாம்!
சென்னை : 90களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் ரம்பா. கொஞ்சிக்கொஞ்சி பேசும் அழகாலும், தனது கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு தன்வசப்படுத்தினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான கார்த்திக்,அர்ஜூன் , பிரபுதேவா, விஜய், அஜித்,ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல படங்களில் ரவுண்டி கட்டி நடித்துள்ளார்.

தொடை அழகி
பால்போன்ற தேகமுடைய ரம்பாவுக்கு தொடை அழகி என்ற பட்டத்தை கொடுத்து ரசிகர்கள் அழகு பார்த்தனர். சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த போதே, சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் ரம்பா

அழகிய லைலா
1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் அழகிய லைலா பாடல் இன்று வரை அனைவரும் ரசிக்கும் பாடலாகவே உள்ளது.

திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை
2010ம் ஆண்டு இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்குபிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரம்பா, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். ரம்பாவுக்கு 2 மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

நன்றி கூறிய ரம்பா
திரைப்படங்களில் தலைகாட்டவில்லை என்றாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரம்பா. இன்ஸ்டாவில் இவரை, 2 மில்லியன் பாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகின்றார். இதற்கு நன்றி கூறும் விதமாக தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம், கன்னடம் ,மலையாளம் என 6 மொழிகளில் நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











