சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் லேட்டஸ்ட் அப்டேட்...ஒரே நேரத்தில் இணைந்த 2 பிரபலங்கள்

சென்னை : டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சமீபத்தில் தான் காரைக்குடியில் நடந்த 51 நாள் படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்தது.

2 more popular celebrities joined in suriyas etharkum thunindhavan

கிராமத்து கதையாகவும், அதே சமயம் சோஷியல் மெசேஜ் சொல்லும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகே வெற்றமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் வேலைகளை துவக்க உள்ளார் சூர்யா.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபஸ்ட்லுக் ஜுன் மாதம் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யாவின் பிறந்தநாளன்று டைட்டிலுடன் வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்த படம் டிசம்பர் 24 ம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் லேட்டஸ்ட் வரவாக டைரக்டர் கே.பி.ஜெகன் இணைந்துள்ளார். விஜய் நடித்த புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்ப காணோம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். மாயண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நடிகராகவும் மாறினார்.

பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் இணைந்துள்ளது பற்றிய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள ஜெகன், எப்போதும் எனது வேலையை நான் நேசிக்கிறேன். எதற்கும் துணிந்தவன் என பதிவிட்டுள்ளார். ஜெகன் மட்டுமல்ல நடிகர் வினய் ராய்யும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் சென்னை ஈசிஆர்.,ல் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். இந்த ஷுட்டிங்கில் டைரக்டர் ஜெகனும், நடிகர் வினய்யும் பங்கேற்க உள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. சூர்யா இந்த படத்தில் மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X