»   »  இந்த வருஷம் விஷாலுக்கு இன்னும் ரெண்டு படம் இருக்கு!

இந்த வருஷம் விஷாலுக்கு இன்னும் ரெண்டு படம் இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு நடிகர், தயாரிப்பாளர் விஷாலுக்கு வெற்றி ஆண்டுதான். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்று அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். தற்போது விஷால் தயாரிப்பில், நடிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் தமிழகம் , கேரளா வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

துப்பறிவாளன் தெலுங்கு டப்பிங் 'டிடெக்டிவ்' என்ற தலைப்பில் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. அதே தீபாவளிக்கு விஷால் - மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான 'வில்லன்' வெளியாகவுள்ளது.

2 more release for Vishal

இதைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் - புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் த்ரில்லர் படமான 'இரும்புதிரை' வருகிற ஜனவரி 12, 2018 தை பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது.

English summary
This year actor - producer Vishal having 2 different movies back to back.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil