»   »  தள்ளிப் போகிறதா ரஜினியின் 2.ஓ? லைகா விளக்கம்

தள்ளிப் போகிறதா ரஜினியின் 2.ஓ? லைகா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் 2.ஓ தள்ளிப் போகலாம் என்று மீடியாவில் உலா வரும் செய்திகளுக்கு மீண்டும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது லைகா நிறுவனம். திட்டமிட்டபடி ஜனவரி 25-ல் படம் வெளியாகும் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரூ 400 கோடி செலவில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் என்பதால், மிக சிரத்தையாக கிராபிக்ஸ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாமதமா?

தாமதமா?

வரும் 2018 ஜனவரி 25 -ல் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், '2.0' கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய இன்னும் அதிக காலம் தேவைப்படுவதால், கோடை விடுமுறையில் வெளியாகும் என தகவல் வெளியாகின.

நோ நோ

நோ நோ

இதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து விசாரித்த போது, "கிராபிக்ஸ் காட்சிகள் தாமதமாவதால் தான் தீபாவளி வெளியீட்டிலிருந்து ஜனவரி வெளியீட்டுக்கு மாற்றினோம். ஜனவரி 25 வெளியீட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அதற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும்," என்று தெரிவித்துள்ளது.

இறுதிப் பாடல்

இறுதிப் பாடல்

மேலும் இறுதிப்பாடல் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ளது. 12 நாட்கள் நடைபெறவுள்ள இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பாடலில் ரஜினி, எமி பங்கேற்கிறார்கள்.

தீபாவளி நாளில்

தீபாவளி நாளில்

படத்தின் இசை வெளியீடு வரும் தீபாவளி அன்று நடக்கும் என ஏற்கெனவே அறிவித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

English summary
Lyca Productions has announced that Rajinikanth's magnum opus 2.O will be released on January 25th as per schedule.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil