»   »  விஎப்எக்ஸ் டீமால் 2.ஓ ரிலீசுக்கு வந்த சிக்கல்... குழப்பத்தில் திரையுலகம்!

விஎப்எக்ஸ் டீமால் 2.ஓ ரிலீசுக்கு வந்த சிக்கல்... குழப்பத்தில் திரையுலகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் ஒரு படம் ரிலீசானால் அது ஒட்டு மொத்த திரையுலகுக்கே திருவிழா மாதிரிதான். ரூ 165 கோடி வரை வசூலித்த லிங்காவை நஷ்டம் என்று சிலர் சொன்னாலும், உண்மையில் திரையரங்குகளில் வியாபாரம் கொடி கட்டிப் பறந்தது.

இவர்கள் சொன்னதெல்லாம் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையில் அடிப்படையில். ஆனால் உண்மையில் அப்படியா வசூலிக்கிறார்கள்? அடுத்து கேன்டீன் வருமானம். படத்துக்கு வரும் கலெக்ஷனை விட இந்த கேன்டீன் கலெக்ஷன் பல மடங்கு அதிகம்.

ரஜினி படம் வேணும்

ரஜினி படம் வேணும்

ரஜினி படம் ரிலீசானால் தியேட்டர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான். வெளியில் நஷ்டம் என்று சொன்ன தியேட்டர்கள்கூட, அடுத்து ரஜினி படம் எப்போது ரிலீஸ் எனக் காத்திருந்து வாங்குவது அதனால்தான்.

2.ஓ

2.ஓ

ரஜினி - ஷங்கரின் அடுத்த படமான 2.ஓவுக்காக பெரும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் மட்டுமல்ல, தியேட்டர்களும் காத்திருக்கின்றன. இந்தப் படத்துக்காகவே நூற்றுக்கும் அதிகமான அரங்குகள் 3டிக்கு மாறியுள்ளன.

பெரிய ஏமாற்றம்

பெரிய ஏமாற்றம்

பொங்கல் முடிந்து ஓரிரு வாரங்களில் படம் வந்துவிடும் என நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, அந்தத் தேதியில் படம் வராது என்ற செய்தி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் மீடியாவில்தான் செய்தி வெளியாகியுள்ளது. எங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் எதுவுமே தெரிவிக்கவில்லை என்று கூறி, தயாரிப்பாளரின் பதிலுக்காகக் காத்திருக்கிறார்கள்.

விஎஃப்எக்ஸ் டீம்

விஎஃப்எக்ஸ் டீம்

இந்த தாமதத்துக்குக் காரணம், நாம் நேற்றே குறிப்பிட்டது போல, விஎஃப்எக்ஸ் டீமின் தாமதம்தான் என்பது உறுதியாகியுள்ளது. உலகின் பெஸ்ட் விஎஃப்எக்ஸ் டீம் வேலைப் பார்த்தாலும், அதிக காட்சிகளில் கிராபிக்ஸ் தேவைப்படுவதால் இன்னும் 3 மாத காலம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டார்களாம்.

தேதிகள் மாறும்

தேதிகள் மாறும்

இதனால் நவம்பரில் நடக்கவிருந்த டீசர் வெளியீடு, டிசம்பரில் ட்ரைலர் வெளியீடு தேதிகள் மாற வாய்ப்புள்ளது.

English summary
The postponement of Rajinikanth's 2.O gave big shock to theaters and distributors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil