»   »  சீனா இந்தியாவுக்குக் குறி வைக்கிறது.. "2.ஓ" சீனாவைக் குறி வைக்கிறது.. 20,000 தியேட்டர்களாம்!

சீனா இந்தியாவுக்குக் குறி வைக்கிறது.. "2.ஓ" சீனாவைக் குறி வைக்கிறது.. 20,000 தியேட்டர்களாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் 2.ஓ திரைப்பட வெளியீடு, இதுவரை எந்த இந்திய சினிமாவுக்கும் நடக்காத அளவுக்கு பிரமாண்டமாய் இருக்கும் என்பதை இன்று நடந்த ஒரு கலந்துரையாடலில் லைக்கா நிறுவனம் தெளிவாக்கியுள்ளது.

2.ஓ படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த இந்தியப் படத்திலும் பார்த்திராத அளவுக்கு 3 டி எஃபெக்ட்ஸில் மிரட்டப் போகும் என 2.ஓவை திரையிலகினர் கணித்துள்ளனர்.

இந்தப் படம் முழுக்க முழுக்க 3டியில் மட்டுமே வெளியாகவிருப்பதால், தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அரங்குகளை அதற்கேற்ற மாதிரி மாற்றும் வேலைகள் நடக்கின்றன.

தமிழகத்தில்

தமிழகத்தில்

தமிழகத்தில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட அரங்குகள்தான் 3டியில் திரையிடும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒரே ஒரு ஐமேக்ஸ் அரங்கம் மட்டுமே சென்னையில் உள்ளது. மேலும் அதிக அரங்குகளை 3டிக்கு மாற்றும் முயற்சியில் உள்ளது லைகா நிறுவனம்.

2.ஓ சந்திப்பு

2.ஓ சந்திப்பு

2.ஓ படத்தை திரையிடுவது குறித்து '2.ஓ டிஜிடல் சந்திப்பு' என்ற பெயரில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை லைகா நிறுவனம் இன்று சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு திரையரங்க உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்திருந்தனர்.

சீனாவில்

சீனாவில்

அப்போது பேசிய ராஜு மகாலிங்கம், 3 டி அரங்குகள் இந்தியாவில் மிகக் குறைவாகவும், சீனாவில் அதிகமாகவும் இருப்பதாகக் கூறினார். சீனாவில் மட்டும் 20 ஆயிரம் திரையரங்குகளில் 3டி படங்களை வெளியிட முடியும் என்றார்.

அமெரிக்க, பிரிட்டனில்...

அமெரிக்க, பிரிட்டனில்...

2.ஓ படத்தையும் சீனாவில் அதிக அரங்குகளில் வெளியிடவிருக்கிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் 3டி அரங்குகள் அதிகம் என்பதால் அங்கும் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவு எண்ணிக்கையில் திரையிடவிருக்கின்றனர்.

English summary
Rajinikanth's 2.O is targetting large number of 3D theaters in China and western countries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil