»   »  2.ஓ தான் முதலில் வெளியாகும்! - ரஜினிகாந்த்

2.ஓ தான் முதலில் வெளியாகும்! - ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலாவுக்கு முன் 2.ஓ படம்தான் முதலில் வெளியாகும் என ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் தெரிவித்தார்.

2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை துபாய் நகரில் உலகமே வியக்கும் அளவுக்கு நடந்து முடிந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர், நேற்று இரவு சென்னை திரும்பினர்.

காலாவுக்கு முன்

காலாவுக்கு முன்

அவரிடம் 2.ஓ படத்தின் ரிலீஸ் தேதியில் நிலவும் குழப்பம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "காலா படத்துக்கு முன் 2.ஓ படம்தான் ரிலீஸ் ஆகும்," என்றார்.

ரஞ்சித் அறிவிப்பு

ரஞ்சித் அறிவிப்பு

2.ஓ படம் வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஏப்ரல் 14-ம் தேதி காலா வெளியாகும் என்று இயக்குநர் ரஞ்சித் கூறியிருந்தார்.

லைகா அமைதி

லைகா அமைதி

ஆனால் ஜனவரி 25-ம் தேதி அக்ஷய் குமாரின் பேட்மேன் (Padman) வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், அந்தத் தேதியில் 2.ஓ வெளிவராது என்பது உறுதியானது. ஏப்ரல் 13-ம் தேதிக்கு 2.ஓ தள்ளிப் போனதாகக் கூறப்பட்ட நிலையில், லைகா நிறுவனம் அமைதி காக்கிறது.

ஆகஸ்டில் காலா?

ஆகஸ்டில் காலா?

இந்த நிலையில்தான் காலாவுக்கு முன் 2.ஓ வெளியாகிவிடும் என்று ரஜினி கூறியுள்ளார். 2.ஓ ஏப்ரல் 13-ம் தேதியும், காலா ஆகஸ்டிலும் வெளியாகக் கூடும் என்கிறார்கள்.

English summary
Rajinikanth has confirmed that his 2.O will release before Kaala.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos