‘இது நானா’ குதித்து கொண்டாடிய சிறுவன்... Walt Disney-ன் ‘என்காண்டோ’ படத்தின் சுவாரஸ்ய சம்பவம்
நியூயார்க் : வால்ட் டிஸ்னி தயாரிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் என்காண்டோ.
அனிமேஷன் படமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தின் கேரக்டர்கள் அனைத்தும் சிறுவர்கள் முதல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்தப் படத்தையொட்டி தற்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

என்காண்டோ படம்
வால்ட் டிஸ்னி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் என்காண்டா. அனிமேஷன் மற்றும் காமெடி படமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தை ஜார்ட் புஷ் மற்றும் பைரன் ஹாவர்ட் இயக்கியிருந்தனர். கடந்த நவம்பர் மாதத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளது.

வசூல் சாதனை
இந்த கார்ட்டூன் கேரக்டர்களுக்கு ஸ்டீபன் பீட்ரிட்ஸ் உள்ளிட்டவர்கள் உயிர் கொடுத்துள்ளனர். மிகவும் சிறப்பான அனுபவத்தை இந்தப் படம் சிறுவர்கள் முதல் அனைவருக்கும் கொடுத்துள்ளது. இதுவரை 207 மில்லியன் டாலர் வசூலை உலகளவில் இந்தப் படம் ஈட்டியுள்ளது.

புதையல் பயணம்
படத்தில் தனக்கான புதையலைத் தேடி பயணிக்கும் மிராபெல் மாட்ரிகல் சந்திக்கும் சவால்களையும் சுவாரஸ்யங்களையும் பற்றி இந்தப் படம் கதைக்களமாக கொண்டு வெளியானது. படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் சிறப்பான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

சுவாரஸ்யமான சம்பவம்
இந்நிலையில் இந்தப் படத்தைக் கொண்டு அமெரிக்காவில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. படத்தின் ஆன்டோனியோ கேரக்டரைப் போலவே உருவ அமைப்பு கொண்ட 2 வயது சிறுவன் கென்சோ, குடும்பத்தினருடன் படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்துகொண்ட விதம் குறித்து அவரது தாய் சிலிர்ப்புடன் பகிர்ந்துள்ளார்.

கேரக்டராக காட்சியளித்த சிறுவன்
படத்தை டிஸ்னியில் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ஆன்டானியோ கேரக்டர் வரும்போது தனது மகன், அதன் அருகில் சென்று சிரித்துக் கொண்டே தன்னையும் தனது கணவரையும் பார்த்ததாகவும், அந்த கேரக்டராகவே அவன் நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நம்பமுடியாத மகிழ்ச்சி
மேலும் அந்த கேரக்டரை போலவே தனது மகன் இருந்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தன்னை மிகவும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உண்மை தான் ஆன்டோனியோ கேரக்டரை போலவே அந்த சிறுவன் காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











