»   »  60 வயது பெருசுக்கு 20 வயது ஹீரோயின்: கொந்தளிக்கும் நடிகை

60 வயது பெருசுக்கு 20 வயது ஹீரோயின்: கொந்தளிக்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: 60 வயது ஹீரோவுக்கு 20 வயது நடிகையை ஜோடியாக போடுகிறார்களே என்று நடிகை ரீமா கல்லிங்கல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மலையாள திரையுலகில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சம்பளம் இல்லை என்றும், சரிசமமாக நடத்தப்படுவதும் இல்லை என்றும் நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

மலையாள நடிகைகள் தங்களின் நிலைமை குறித்து துணிச்சலாக பேசத் துவங்கியுள்ளனர்.

ரீமா கல்லிங்கல்

ரீமா கல்லிங்கல்

ஒரு 20 வயது பெண்ணை 60 வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வைக்கிறார்கள். அதே சமயம் 50 வயது பெண்ணை 60 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்க வைக்கிறார்கள் என்கிறார் ரீமா கல்லிங்கல்.

நடிகர்கள்

நடிகர்கள்

நடிகர்களுக்கு கிடைக்கும் சம்பளம், புகழ், மரியாதை உள்ளிட்டவற்றில் மிகக் குறைந்த அளவே நடிகைகளுக்கு கிடைக்கிறது என்று தனது மனக் குமுறலை வெளியிட்டுள்ளார் ரீமா.

சீனியர்கள்

சீனியர்கள்

மலையாளம் மட்டும் அல்லாமல் பிற திரையுலகிலும் 60 வயது நடிகர்களுக்கு 20 வயது நடிகைகளை ஜோடியாக்குகிறார்கள். சில நடிகர்கள் தங்களின் மகளை விட சின்ன பெண்களுடன் ஜோடியாக நடிக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்து தான் ரீமா குமுறியுள்ளார்.

மகள்

மகள்

ஒரு சிறுமி ஒரு ஹீரோவுடன் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார். அவரே வளர்ந்து குமரியானதும் அதே ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார். பின் ஜோடியாக நடித்த ஹீரோவுக்கே அம்மாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rima Kallingal said that it is not fair to cast a 20-year-old girl as heroine against a 60-year-old actor. She wants equality in the industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil