»   »  2015-ன் சிறந்த தென்னிந்திய நடிகர் அஜீத்... மம்முட்டி, பிரபாஸ், சுதீப்பை வீழ்த்தி சாதனை

2015-ன் சிறந்த தென்னிந்திய நடிகர் அஜீத்... மம்முட்டி, பிரபாஸ், சுதீப்பை வீழ்த்தி சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், தென்னிந்தியாவின் சிறந்த நடிகராக அஜீத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் யார்? என்ற கருத்துக் கணிப்பை பிரபல செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்தியது.

2015 Best South Indian Actor Ajith

இதில் அஜீத், மம்முட்டி, பிரபாஸ், சுதீப், விக்ரம் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களின் பெயர்கள், அவர்கள் நடிப்பில் வெளியான படங்களுடன் இடம்பெற்றன.

முடிவில் 46.88% வாக்குகளுடன் அஜீத் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 42.58% வாக்குகளுடன் 2 வது இடத்தை மலையாள நடிகர் மம்முட்டி பெற்றிருக்கிறார்.

பாகுபலி புகழ் பிரபாஸ் 4.01% வாக்குகளுடன் 3 வது இடத்தையும், மற்றொரு மலையாள நடிகரான பிருத்விராஜ் 2.27% வாக்குகளுடன் 4 வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

முன்னணி நடிகர்களை வீழ்த்தி அஜீத் முதலிடம் பெற்றதை, அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

English summary
According to a poll of India's leading news Media, Ajit has been selected as the best actor of South India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil