»   »  ஜெயம் ரவி, சூர்யாவுடன் "முடிய"ப் போகும் 2015

ஜெயம் ரவி, சூர்யாவுடன் "முடிய"ப் போகும் 2015

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவியின் பூலோகம் ,சூர்யாவின் பசங்க 2 மற்றும் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய படங்களுடன் இந்த வருடம் தனது வாழ்நாளை முடித்து கொள்ளப்போகிறது.

இந்த 2015 ம் ஆண்டு கோலிவுட்டில் வெளியான படங்களில் சுமார் 10% படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக மாறியிருக்கின்றன. இதில் வெற்றிகளை சுவைத்து கோலிவுட்டின் ஜெயமான நாயகனாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.


2015: Clash Between Surya and Jayam Ravi

இந்த 2015 முடிய இன்னும் சரியாக 11 நாட்களே உள்ளன. இதில் கடந்த வாரம் தங்கமகன் திரைப்படம் மட்டுமே வெளியானது. இந்நிலையில் வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 24 ம் தேதி பூலோகம், பசங்க 2 மற்றும் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய படங்கள் வெளியாகின்றன.


இதே தேதியில் வெளியாகவிருந்த விமலின் அஞ்சலை மற்றும் ரமேஷ் அரவிந்தின் வில் அம்பு ஆகிய திரைப்படங்கள் எதிர்பாராதவிதமாக தள்ளிப் போயிருக்கின்றன.


கடைசி நேரத்தில் இந்தப் படங்களில் ஒருசில மாறுதல்கள் ஏற்படலாம் எனினும் தற்போதைக்கு மேலே சொன்ன படங்கள் மட்டுமே வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.


ஜெயம் ரவிக்கு ஏற்கனவே 2 படங்களின் மூலம் ஜெயம் கிடைத்து விட்ட நிலையில் சூர்யாவிற்கும் அது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
2015 Year end:Surya's Pasanga 2, Jayam Ravi's Bhooloham and Vellaya Irukuravan Poi Solla Mattan movies are Released on Coming 24th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil