»   »  தீபாவளிக்கு மோதிக் கொள்ளும் கமல், அஜீத்... ஆனா இது புதுசில்லை பாஸ்!

தீபாவளிக்கு மோதிக் கொள்ளும் கமல், அஜீத்... ஆனா இது புதுசில்லை பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த தீபாவளி தினத்தில் கமலின் தூங்காவனம் படத்துடன் அஜீத்தின் வேதாளம் மோதவிருப்பது, திரையுலகில் சற்றே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கமல், அஜீத்தின் மோதல் திரையுலகிற்கு ஒன்றும் புதிதல்ல. இவர்கள் இருவரும் தங்களின் படங்கள் மூலமாக ஏற்கனவே 3 முறை மோதிக் கொண்டிருக்கின்றனர்.


2015 Diwali Battle: Kamal Haasan vs Ajith Kumar

இந்த தீபாவளிக்கு இவர்கள் இருவரும் தங்களின் படங்கள் மூலமாக 4 வது முறையாக மோதிக் கொள்ளவிருக்கின்றனர். முன்னதாக இருவரும் மோதிக் கொண்ட படங்கள் மற்றும் தற்போதைய மோதல் ஆகியவை பற்றி இங்கே காணலாம்.


நம்மவர் vs பவித்ரா


1994ம் ஆண்டில் கமலின் நம்மவர் படமும், அஜீத்தின் பவித்ரா படமும் முதன்முறையாக மோதிக் கொண்டது. இந்த 2 படங்களும் நவம்பர் 2 ம் தேதியில் வெளியானது. 2 படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது, இதில் அஜீத்தின் பவித்ரா படத்திற்கு சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த பாடல் வரிகள் ஆகியவற்றிற்காக 2 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


ஹேராம் vs முகவரி


2000 த்தில் கமலின் ஹேராம் படமும், அஜீத்தின் முகவரி படமும் பிப்ரவரி 18ம் தேதியில் வெளியாகி மோதிக் கொண்டன. ஹேராம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்றது, மேலும் 2000 ல் வெளியான படங்களில் ஓபனிங் வசூல் அதிகம் பெற்ற படங்களில் ஒன்றாகவும் ஹேராம் திகழ்ந்தது


பம்மல்கே சம்பந்தம் vs ரெட்


மீண்டும் 2 ஆண்டுகள் கழித்து அஜீத்தின் ரெட் மற்றும் கமலின் பம்மல் கே சம்பந்தம் 2 படங்களும் 2002 ம் ஆண்டு பொங்கல் தினமான ஜனவரி 14ல் வெளியாகி மோதிக் கொண்டன. இதில் ரெட் படு தோல்வி அடைந்தது. பம்மல் சம்பந்தம் காமெடிக்காக ஓடியது.


13 ஆண்டுகள்


2002 ம் ஆண்டிற்குப் பின்னர் தற்போது மீண்டும் இருவரும் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இந்த தீபாவளி தினத்தில் மோதக் காத்திருக்கின்றனர். இதனால் கமல் மற்றும் அஜீத் 2 பேரின் ரசிகர்களும் மிகவும் ஆர்வமுடன் இந்த தீபாவளியை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.


தூங்காவனம் vs வேதாளம்


நீண்ட இடைவெளி கழித்து இந்தத் தீபாவளிக்கு கமலின் தூங்காவனம் மற்றும் அஜீத்தின் வேதாளம் என 2 படங்களும் வெளியாகின்றன. நவம்பர் 10 ம் தேதி வெளியாகும் இப்படங்களில் தூங்காவனத்திற்கு யூ/ஏ சான்றிதழும், வேதாளதிற்கு யூ சான்றிதழையும் தணிக்கைக் குழுவினர் அளித்திருக்கின்றனர். 2 பேரின் மோதலில் இருவருமே வெற்றியைப் பறிப்பார்கள் எனினும் வசூலில் யார் முன்னணி பெறுவார்கள் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதற்கான பதில் என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Kamal Haasan's Thoongavanam and Ajith Kumar's Vedalam both Movies to hit the Screens on November 10. Now Kamal And Ajith it is a 4th Time to Clash between the Box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil