twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாட்ரிக் நாயகி, லேடி சூப்பர்ஸ்டார்.. 2015 ன் வெற்றி தேவதையாக மாறிய நயன்தாரா

    By Manjula
    |

    சென்னை: இந்த 2015ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு வேண்டுமானால் உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நயன்தாராவைக் கேட்டால் ஒரு நாயகியாக இந்த ஆண்டுதான் அவருக்கு ஏராளமான அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுத்தது என்பார்.

    இந்த ஆண்டில் நயன்தாரா நடிப்பில் நண்பேன்டா, மாசு என்கிற மாசிலாமணி, தனி ஒருவன்,மாயா மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய 5 படங்கள் வெளியாகி இருக்கின்றன.

    இவற்றில் வரிசையாக 3 படங்கள் ஹிட்டடித்ததில் 2015 ம் ஆண்டின் ஹாட்ரிக் நாயகி பட்டம் நயனைத் தேடி வந்திருக்கிறது.

    நயன்தாரா

    நயன்தாரா

    நடிக்கும் படங்களின் விளம்பரங்களில் கலந்து கொள்வதில்லை, தேவையில்லாமல் பேட்டிகள் கொடுப்பது இல்லை. சினிமா சம்பந்தமான எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்று ஏகப்பட்ட இல்லைகள் இருந்தாலும் தமிழ் சினிமாவில் மிகவும் அழுத்தமாக இடம்பிடித்து இருக்கிறார் நயன்தாரா. எவ்வளவு கிசுகிசுக்கள், வதந்திகள் என்று வந்தாலும் அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தனது அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்துவதுதான் தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டு விட்டது போலும். இவரின் சமீபத்திய பிறந்தநாளை தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று டேக் போட்டு கொண்டாடித் தீர்த்து விட்டனர்.

    ஆண்டு 1 படங்கள் 5

    ஆண்டு 1 படங்கள் 5

    இந்த ஒரே ஆண்டில் நயன்தாரா நடிப்பில் நண்பேன்டா, மாசு என்கிற மாசிலாமணி, தனி ஒருவன்,மாயா மற்றும் நானும் ரவுடிதான் என்று கிட்டத்தட்ட 5 படங்கள் வெளியாகி இருக்கின்றன.

    நண்பேன்டா

    நண்பேன்டா

    இது கதிர்வேலன் காதல் சொதப்பினாலும் அசராமல் தனது அடுத்த படமான நண்பேன்டாவில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைத்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் சந்தானம், நயன்தாரா எல்லோரும் இருந்தும் கதை என்ற ஒன்று துளியும் இல்லாததால் படம் படுத்து விட்டது. "ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா" என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    மாசு என்கிற மாசிலாமணி

    மாசு என்கிற மாசிலாமணி

    நயன்தாராவா இப்படி ஒரு படத்தில் நடித்தார் என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு இந்தப் படத்தில் மிகக் குறைந்த காட்சிகளே வந்து திகைக்க வைத்தார் நயன்தாரா. இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் 2 வது நாயகியான பிரணிதாவிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட நயன்தாராவிற்கு அளிக்கவில்லை என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருந்தது. இந்தப் படமும் தோல்வியைத் தழுவியதில் தோல்வி நாயகி என்ற பட்டம் நயனுக்கு கிடைத்தது.

    தனி ஒருவன்

    தனி ஒருவன்

    ஜெயம் ரவியுடன் நயன்தாரா முதன்முறையாக சேர்ந்து நடித்த இந்தப்படம் நயன்தாராவிற்கு மட்டுமின்றி ஜெயம் ரவிக்கும் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்தப் படத்தில் தடயவியல் நிபுணராகவும், ஜெயம் ரவியின் காதலியாகவும் வந்து கிடைத்த சிறு கேப்பிலும் நடிப்பில் வெரைட்டி காட்டியிருந்தார் நயன். இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் மற்றும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம் என்ற பெருமைகளைப் பெற்றது தனி ஒருவன். தற்போது தனி ஒருவன் படத்தின் 2வது பாகம் கண்டிப்பாக வரும் என்று சுவாரஸ்யம் விதைத்திருக்கிறார் ஜெயம் ரவி.

    மாயா

    மாயா

    தற்போதைய காலகட்டத்தில் ஒரு நாயகி நடித்து வெற்றி கண்ட படம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றது மாயா. ஒரு கைக்குழந்தைக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார் நயன்தாரா. சொல்லப்போனால் இந்தப் படத்திற்குப் பின் அவரை விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது என்று கூட சொல்லலாம். அறிமுக இயக்குநர் படம் என்ற பாரபட்சம் எதுவும் பாராமல் தனது நடிப்புத் திறமையை வெளிக்கொணர ஒரு வாய்ப்பாக மாயாவை பயன்படுத்திக் கொண்டார் நயன்தாரா.முழுக்க, முழுக்க நயன்தாராவை மையப்படுத்தி எடுத்த இந்தப் படத்தை வெற்றி பெற வைத்ததில் நயனின் பங்கு மிகவும் அதிகம்.

    நானும் ரவுடிதான்

    நானும் ரவுடிதான்

    இப்படி ஒரு கதையை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள் அதிலும் ஹீரோயினை காது கேளாதவராக நடிக்க வைக்க ஒரு தனி தைரியமே வேண்டும். விக்னேஷ் சிவனுக்கு தைரியம் தாரளாமாக இருந்ததால் துணிந்து நயனை இந்தப் படத்தில் காது கேளாத காதம்பரியாக நடிக்க வைத்திருந்தார். வழக்கம் போல தனது அபார நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து நானும் ரவுடிதான் படத்தை இந்த ஆண்டின் வெற்றிப்படமாக மாற்றினார் நயன்தாரா. இந்தப் படத்தின் மூலம் ஹாட்ரிக் நாயகி என்ற பட்டமும் இவரின் வசமானது.

    50 நாட்கள்

    50 நாட்கள்

    இவரின் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் திரைப்படம் 100 நாட்களும், மாயா மற்றும் நானும் ரவுடிதான் படங்கள் 50 நாட்களைத் தாண்டியும் சாதனை படைத்தது.

    2016ம் நயனுக்கு தான்

    2016ம் நயனுக்கு தான்

    இது நம்ம ஆளு, மாரீசன், கஷ்மோரா, திருநாள் மற்றும் சற்குணம் உதவியாளர் படம் என்று கைநிறைய படங்கள் நயன்தாரா வசம் இருக்கின்றன. இதன் மூலம் 2015 போலவே 2016லும் நயன்தாரா மற்ற நாயகிகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.30 வயதைக் கடந்தாலும் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் மாற்றம், முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் நயன்தாரா.

    மொத்தத்தில் இந்த ஆண்டைப் போலவே வரும் ஆண்டிலும் நயனின் கொடி கோலிவுட்டில் ஓங்கிப் பறக்கும் என்பதே தமிழ் சினிமா ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

    English summary
    In 2015 Thani Oruvan,Maya and Naanum Rowdy Dhaan Nayanthara Got Hat-Trick Hits. Now she is Turned a Most Successful Heroine in Kollywood Industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X