»   »  2015: படம் எப்படியோ.. டாப் 10 டிரெய்லர்களில் புலிதான் "பர்ஸ்ட்".. வேதாளம் "நெக்ஸ்ட்"!

2015: படம் எப்படியோ.. டாப் 10 டிரெய்லர்களில் புலிதான் "பர்ஸ்ட்".. வேதாளம் "நெக்ஸ்ட்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சினிமாவின் டிரெய்லர் என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

எங்களது பட டிரெய்லரை இத்தனை லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர் என்று படக்குழுவினர் விளம்பரப்படுத்தி கொள்வதும் அதிகரித்து விட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சுமார் 250 க்கும் மேற்பட்ட படங்களின் டிரெய்லர்கள் யூ டியூப்பில் வெளியிடப்பட்டன.

இதில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 10 டிரெய்லர்கள் பட்டியல் மற்றும் இதில் இடம்பிடித்திருக்கும் நடிகர்கள் ஆகியோரைப் பற்றி இங்கே காணலாம்.

புலி

கடந்த ஆண்டு வெளியான டிரெய்லர்களில் அதிகம் பேரைக் கவர்ந்த நம்பர் 1 டிரெய்லர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது நடிகர் விஜய்யின் புலி டிரெய்லர். விஜய், சுதீப், சுருதிஹாசன், ஹன்சிகா மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான புலி டிரெய்லரை இதுவரை 8,112,607 பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இப்படம் விஜய்க்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

வேதாளம்

புலி படத்திற்குப் பின்னர் வெளியான அஜீத்தின் வேதாளம் 6,172,741 பார்வைகளைப் பெற்று இந்த வரிசையில் 2 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான இப்படம் 2015 ன் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது. அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மாரி

விஜய், அஜீத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்திருக்கிறார் தனுஷ். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மாரி படத்தின் டிரெய்லரை இதுவரை 5,490,801 பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். அனிருத் இசையில் வெளியான பாடல்கள் வெற்றி பெற்றாலும் படம் தனுஷிற்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

ஓ காதல் கண்மணி

ஓ காதல் கண்மணி இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 4.இந்தத் தலைமுறையினரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கிய இப்படத்திற்கு பாராட்டுகளும், எதிர்ப்புகளும் ஒருசேர எழுந்தது. பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக்கொடி நாட்டிய இப்பட டிரெய்லரை இதுவரை 5,120,771 பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

மாசு என்கிற மாசிலாமணி

மாசு என்கிற மாசிலாமணி

சூர்யாவின் நடிப்பில் வெளியான மாசு டிரெய்லர் இந்தப் பட்டியலில் 5 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரை இதுவரை 4,553,562 பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். 2015 ன் அதிகம் எதிபார்க்க வைத்து ஏமாற்றிய படங்கள் பட்டியலில் மாசுவிற்கும் ஒரு இடமுண்டு.

காக்கிச்சட்டை

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தின் டிரெய்லருக்கு இந்தப் பட்டியலில் 6 வது இடம். இதுவரை 3,423,189 இந்த டிரெய்லரை பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். ரொம்பவும் லாபமில்லை அதே சமயம் நஷ்டமும் இல்லை என்றப் பட்டியலில் காக்கிச்சட்டை இணைந்து கொண்டது. இந்தப் படத்துடன் தனுஷ் - சிவகார்த்திகேயன் கூட்டணி முடிவிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

10 என்றதுக்குள்ள

ஐ படத்திற்குப் பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு விஜய் மில்டனின் சொதப்பலான திரைக்கதை காணாமல் போகச்செய்துவிட்டது. ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பில் வெளியான இப்பட டிரெய்லருக்கு இந்தப் பட்டியலில் 7 வது இடம் கிடைத்திருக்கிறது. இதுவரை 3,408,694 பேர் இந்த டிரெய்லரை பார்த்திருக்கின்றனர்.

தூங்காவனம்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காவனம் டிரெய்லர் இந்தப் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தனது உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வாவை இயக்குனராக்கியவர் என்ற பெருமை மட்டுமே இந்தப் படத்தால் கமல்ஹாசனுக்கு கிடைத்தது. இதுவரை இந்த டிரெய்லரை 3,070,387
பார்த்து ரசிதிருக்கின்றனர்.

வாலு

வாலு டிரெய்லரை சிம்புவுக்காக பார்த்தவர்களை விட படம் சந்தித்த பிரச்னைகளுக்காக பார்த்தவர்கள் தான் அதிகம். இதுவரை 1,885,581 இந்த டிரெய்லரை பார்த்ததன் மூலம் இந்தப் பட்டியலில் வாலு 9 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

தனி ஒருவன்

2015 ன் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறிய தனி ஒருவன் வசூலில் சாதனை புரிந்த அளவிற்கு டிரெய்லரில் சாதனை செய்யவில்லை. இதனால் ஜெயம் ரவி - அரவிந்த் சாமி கூட்டணியில் வெளியான தனி ஒருவன் டிரெய்லர் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது. தனி ஒருவன் டிரெய்லரை இதுவரை 1,562,806 பார்த்து ரசித்திருக்கின்றனர்.

English summary
2015: Most Viewed Movie Trailers List. Vijay's Puli which Got Number 1 Place For this List, Yet 8,112,607 Fans View this Trailer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil