»   »  2015: ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த 'டாப் 5' கனவுக் கன்னிகள்

2015: ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த 'டாப் 5' கனவுக் கன்னிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த 2015 ம் ஆண்டு நடிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும் நடிகைகளுக்கு நல்லதொரு ஆண்டாகவே அமைந்திருக்கிறது.

அந்த வகையில் தங்களின் நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களைக் கவர்ந்த டாப் 5 கனவுக்கன்னிகள் யார் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

அதிகப் படங்கள், வெற்றி இவற்றுடன் ரசிகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் வகைபடுத்தப் பட்டிருக்கிறது.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 5. கொம்பன், வேதாளம் என்று இவர் நடித்த 2 படங்களுமே இந்த வருடத்தின் வெற்றிப் படங்களாக மாறியிருக்கிறது. கொம்பனில் இளம் மனைவியாக நடித்தவர், வேதாளத்தில் அஜீத்தின் அன்புத் தங்கையாக நடித்து அசத்தினார்.வரும் ஆண்டிலும் மிருதன், ஜெமினி கணேசன், சிப்பாய் என்று அடுத்தடுத்த படங்களில் அம்மணி ரொம்ப பிஸி!

ஹன்சிகா

ஹன்சிகா

ஹன்சிகாவிற்கு ரசிகர்கள் அளித்திருக்கும் இடம் 4. ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு மற்றும் புலி ஆகிய படங்கள் ஹன்சிகாவின் நடிப்பில் வெளியாகின.இதில் ரோமியோ ஜூலியட் இந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது. ஆம்பள, வாலு படங்கள் சுமாராக ஓடின. புலி குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்பதால் அதனை விட்டுவிடலாம். மொத்தத்தில் ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் இந்த பட்டியலில் பிற நடிகைகளைத் தாண்டி ஹன்சிகா 4 வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவி ஸ்ரீதிவ்யா இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 3. இந்த வருடம் காக்கிச்சட்டை, ஈட்டி என்று 2 படங்கள் இவரின் நடிப்பில் வெளியாகி இருக்கின்றன. காக்கிச்சட்டை வெற்றியும் இல்லாத தோல்வியும் இல்லாத ஒரு படமாக மாற, ஈட்டி ஹிட் படமாக மாறி ஸ்ரீதிவ்யாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அனுஷ்கா

அனுஷ்கா

பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற படங்களில் ராணியாக நடித்து அசத்திய அனுஷ்கா இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 2. என்னை அறிந்தால், பாகுபலி, ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் இவரின் நடிப்பில் வெளியாகின. இதில் பாகுபலி வசூலில் பின்னியெடுக்க, ருத்ரமாதேவி மற்றும் இஞ்சி இடுப்பழகி போன்ற படங்கள் இவரின் நடிப்புத் திறமைக்கு சான்றாக அமைந்தன. வயதானாலும் அனுஷ்காவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வசீகரித்ததில் அடுத்தடுத்து பாகுபலி 2, சிங்கம் 3 என்று இன்னும் இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாளராகவே இருந்து வருகிறார் அனுஷ்கா.

நயன்தாரா

நயன்தாரா

ரசிகர்களின் அதிகமான வோட்டுகளைப் பெற்று இந்த 2015 ன் கனவுக்கன்னி என்ற பட்டத்தைத் தட்டிச் செல்கிறார் நயன்தாரா. வரிசையாக 3 படங்கள் ஹிட்டடித்ததில் ஹாட்ரிக் நாயகி,தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்களை பெற்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகி என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார். 2016லும் வரிசையாக படங்கள் இருப்பதால் வரும் ஆண்டிலும் நயன்தாராவின் ஆளுமை தமிழ் சினிமாவில் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Following Actress Nayanthara, Anushka, Sri Divya, Hansika and Lakshmi Menon - who is the Dream Girl of Tamil Cinema. now got this Answer Fans Selected Nayanthara is the Dream Girl of 2015.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil