twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கல்பனா, கலாபவன் மணி... தொடர் மரணங்களால் உறைந்து போன மலையாளத் திரையுலகம்

    By Manjula
    |

    திருவனந்தபுரம்: 2016 ம் ஆண்டு ஆரம்பித்து முழுதாக 3 மாதம் முடியவில்லை. அதற்குள் 7 திரை நட்சத்திரங்கள் இதுவரை மலையாளத் திரையுலகில் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் இந்த 2016 ம் வருடம் மலையாளத் திரையுலகின் இருண்ட காலமாக மாறிவிடுமோ? என்ற அச்சம் தற்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

    கலாபவன் மணி உட்பட இந்த 3 மாதங்களில் இதுவரை இறந்து போன மலையாள நட்சத்திரங்கள் பற்றி பார்க்கலாம்.

    கல்பனா (ஜனவரி 25)

    கல்பனா (ஜனவரி 25)

    நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனா(51) கடந்த ஜனவரி 25 ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இறந்து கிடந்தார். படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. 300 க்கும் அதிகமான படங்களில் நடித்துப் புகழ்பெற்ற கல்பனாவின் மரணம் இந்த வருடத்தில் மலையாளத் திரையுலகிற்கு நேர்ந்த முதல் இழப்பாக அமைந்தது.

    ஷான் ஜான்சன் (பிப்ரவரி 5)

    ஷான் ஜான்சன் (பிப்ரவரி 5)

    மலையாளப் பாடகியான ஷான் ஜான்சன் பிப்ரவரி 5 ம் தேதி அவரது அபார்ட்மெண்ட்டில் இறந்து கிடந்தார். ஒருபுறம் இருதயத்தில் ஏற்பட்ட அடைப்புதான் அவரது மரணத்திற்குக் காரணம் என்றும் மற்றொருபுறம் வலிப்பு நோயால் அவர் இறந்தார் என்றும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை அவரின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

    ஓஎன்வி குருப் (பிப்ரவரி 13)

    ஓஎன்வி குருப் (பிப்ரவரி 13)

    மலையாளத்தின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஓஎன்வி குருப்(84) பிப்ரவரி 13 ம் தேதி உயிரிழந்தார். 1989 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான வைஷாலி படத்திற்காக தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் ஓஎன்வி குருப் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    ராஜாமணி (பிப்ரவரி 14)

    ராஜாமணி (பிப்ரவரி 14)

    மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜாமணி(60) கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி இறந்து போனார். 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு தனது இசையால் உயிரூட்டியவர் ராஜாமணி. தற்போது அவரது மகன் பி.ஏ.சிதம்பரநாத் மலையாளப் படங்களுக்கு இசையமைத்து வருவது வருகிறார்.

    அனந்தக் குட்டன் (பிப்ரவரி 14)

    அனந்தக் குட்டன் (பிப்ரவரி 14)

    இசையமைப்பாளர் ராஜாமணி இறந்த அதே நாளில் ஒளிப்பதிவாளர் அனந்தக் குட்டன்(61) இறந்து போனார். 150 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனந்தக் குட்டன் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 14 ம் தேதி அவர் இறந்து போனார்.

    ராஜேஷ் பிள்ளை(பிப்ரவரி 27)

    ராஜேஷ் பிள்ளை(பிப்ரவரி 27)

    பிரபல மலையாள இயக்குநர் ராஜேஷ் பிள்ளை(41) பிப்ரவரி 27 ம் தேதி கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டது, ராஜேஷ் பிள்ளையின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது.

    கலாபவன் மணி( மார்ச் 6)

    கலாபவன் மணி( மார்ச் 6)

    இந்நிலையில் நேற்று பிரபல நடிகர் கலாபவன் மணி(45) கல்லீரல் பிரச்சினை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகையும் தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

    இந்த வருடத்தில் இதுவரை 7 நட்சத்திரங்கள் உயிரிழந்திருப்பதால் மலையாளத் திரையுலகில் ஒருவித அச்ச உணர்வு தற்போது தொற்றிக் கொண்டுள்ளது.

    English summary
    2016: Kalabhavan Mani, Kalpana, Rajesh Pillai, ONV Kurup, Rajamani, Shan Johnson and Anandakuttan these all Mollywood Celebrities Died in this Year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X