»   »  2016-ன் முதல் பிளாக்பஸ்டராக மாறிய ரஜினிமுருகன்... தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பாரா சிவகார்த்தி?

2016-ன் முதல் பிளாக்பஸ்டராக மாறிய ரஜினிமுருகன்... தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பாரா சிவகார்த்தி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான ரஜினிமுருகன் இந்த வருடத்தின் முதல் பிளாக்பஸ்டர் படமாக மாறியிருக்கிறது.

இந்த பொங்கலுக்கு சசிகுமாரின் தாரை தப்பட்டை, உதயநிதியின் கெத்து, விஷாலின் கதகளி மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகிய 4 படங்கள் வெளியாகின.


இதில் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நம்பர் 1 இடத்தைப் பிடித்து 2016 ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படமாக மாறியிருக்கிறது சிவகார்த்தியின் ரஜினிமுருகன்.


2016ல் 9 படங்கள்

2016ல் 9 படங்கள்

2016 ம் ஆண்டில் இதுவரை மாலை நேரத்து மயக்கம், தற்காப்பு, பேய்கள் ஜாக்கிரதை, கரையோரம்,அழகு குட்டிச் செல்லம், கதகளி, கெத்து, தாரை தப்பட்டை மற்றும் ரஜினிமுருகன் என்று மொத்தம் 9 படங்கள் வெளியாகி இருக்கின்றன.


மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம்

புத்தாண்டில் வெளியான படங்களில் செல்வராவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து மயக்கம் மட்டுமே ஓரளவு வரவேற்பைப் பெற்றது. மற்ற படங்களின் நிலை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.


பொங்கல் படங்கள்

பொங்கல் படங்கள்

இந்த பொங்கல் தினத்தில் வழக்கத்திற்கு மாறாக கதகளி, கெத்து, தாரை தப்பட்டை மற்றும் ரஜினிமுருகன் என்று வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாகின.


தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகிய தாரை தப்பட்டையை பாலா ரசிகர்களைத் தவிர வேறு யாரும் ரசிக்கவில்லை. சேது, பிதாமகன் போன்ற வலுவான படங்களை இயக்கிய பாலாவின் படமா இது? என்று கடுமையான விமர்சனங்களை தாரை தப்பட்டை பெற்று வருகிறது. இளையராஜாவும், வரலட்சுமியும் சேர்ந்து படத்தைக் காப்பாற்றினாலும் வசூலில் தாரை தப்பட்டை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.


கதகளி

கதகளி

விஷால்- பாண்டிராஜ் கூட்டணியால் கதகளி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திரைக்கதையில் படத்தை நன்றாக சொதப்பி விட்டார்கள். பாண்டிய நாடு வெற்றி, பாயும் புலி தோல்வி என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல் இரண்டிற்கும் இடையில் சிக்கிக் கொண்டது கதகளி. இதில் உச்சகட்டம் யூ சான்றிதழ் பெற்றும் வரிவிலக்கு கிடைக்காதது தான்.


கெத்து

கெத்து

காமெடி நன்றாக வந்தாலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறுவேன் என்று அடம்பிடித்து இதில் நடித்திருந்தார் உதயநிதி. கடைசியில் பார்த்தால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் சத்யராஜையும், விக்ராந்த்தையும் தியேட்டரில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு வழக்கம் போல வரிவிலக்கு மறுக்கப்பட தற்போது கோர்ட் படியேறி வழக்கு போட்டிருக்கிறார் உதயநிதி.


ரஜினிமுருகன்

ரஜினிமுருகன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட்டணியில் வெளியான ரஜினிமுருகன் 2016 ன் முதல் பிளாக்பஸ்டர் படம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. பொங்கலுக்கு வெளியான படங்களில் குடும்பத்துடன் பார்க்கும் படமாக ரஜினிமுருகன் இருந்தது படத்தின் மிகப்பெரிய பலமாக அமைய தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது இப்படம்.மேலும் பலமுறை ரஜினிமுருகன் தள்ளிப் போனதும் இலவச விளம்பரமாக அமைய 2016 ன் வசூல் ராஜாவாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.


English summary
2016: Sivakarthikeyan’s Rajini Murugan, Vishal’s Kathakali, Udhayanidhi Stalin’s Gethu and Sasikumar’s Tharai Thappattai Released the Pongal Festival. Now Sivakarthikeyan’s Rajini Murugan got First Blockuster of this Year.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil