»   »  2016: வளமான மற்றும் செழிப்பான ஆண்டாக அமையட்டும்...கோலிவுட் நட்சத்திரங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

2016: வளமான மற்றும் செழிப்பான ஆண்டாக அமையட்டும்...கோலிவுட் நட்சத்திரங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015 ன் ஆண்டின் கடைசி தினம் தனது வாழ்நாளை முடித்துக் கொள்ள 2016 ம் ஆண்டு இன்று பிறந்திருக்கிறது. இந்த நல்ல நாளை உலகமே இன்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நாளில் நமது தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் தமது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர்.

புத்தாண்டு வாழ்த்து சொன்ன நட்சத்திரங்கள் சிலரின் வாழ்த்துகளை இங்கே பார்க்கலாம்.

ஜெயம் ரவி

"இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று நடிகர் ஜெயம் ரவி தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

ஆர்யா

"அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு ஒரு மகிழ்ச்சியான மற்றும் வளமான ஆண்டாக இருக்க வாழ்த்துகிறேன். எப்போதும் சிறந்ததையே கொடுங்கள். 2016 அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய வருடமாக அமையட்டும்" என்று நீண்டதாக தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் ஆர்யா.

விஷால்

"அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நாம் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்ற குடும்பங்களையும் மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். வாய்ப்புகள் இருக்கிறது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று விஷால் தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

நயன்தாரா

"அனைவருக்கும் இனிய மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள். கடவுள் தனது அன்பு மற்றும் ஆசிர்வாதங்களை எல்லோருக்கும் அதிகமாக கொடுக்கட்டும்" என்று நயன்தாரா தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
2016: Kollywood Celebrities Arya, Vishal, Jayam Ravi and Nayanthara Happy New Year Wishes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil