»   »  2016: ஆரம்பமே அமர்க்களம் 8 படங்களுடன் புத்தாண்டைத் தொடங்கும் கோலிவுட்

2016: ஆரம்பமே அமர்க்களம் 8 படங்களுடன் புத்தாண்டைத் தொடங்கும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2016 ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் சுமார் 8 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டின் தொடக்க தினமே கோலிவுட்டினரின் மோதல் ஆரம்பமாகி விட்டது.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 204 படங்கள் வெளியாகி இருந்தன. இவற்றில் 10% படங்கள் கூட வெற்றிப் படமாக மாறவில்லை. சிறிய படங்கள் மட்டுமின்றி பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்களின் படங்கள் கூட தோல்வியைத் தழுவின.


இந்த நிலையில் வருகின்ற 2016 ம் ஆண்டாவது தமிழ் சினிமாவிற்கு லாபகரமான ஆண்டாக அமையும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆண்டின் தொடக்கத்திலேயே 8 படங்கள் வெளியாவது சற்று கவலையைத் தருகிறது.


புத்தாண்டு தினம்

புத்தாண்டு தினம்

வழக்கமாக புத்தாண்டு தினத்தில் பெரியளவில் எந்தப் படங்களும் வெளியாகாது. ஆனால் இந்தப் புத்தாண்டில் வழக்கத்திற்கு மாறாக 8 படங்கள் வெளியாகின்றன. புத்தாண்டு முடிந்த 10 தினங்களிலேயே பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் பெரும்பாலான திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொள்ளும். இவை எல்லாம் தெரிந்தும் கூட தங்கள் படங்களை துணிந்து வெளியிடுகின்றனர் படக்குழுவினர்.


கீதாஞ்சலி செல்வராகவன்

கீதாஞ்சலி செல்வராகவன்

இந்தப் புத்தாண்டு தினத்தில் கீதாஞ்சலி செல்வராகவனின் மாலை நேரத்து மயக்கம், சக்திவேல் வாசுவின் தற்காப்பு, பிரியங்காவின் கோடைமழை.


பேய்கள் ஜாக்கிரதை, இனியாவின் கரையோரம், நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க,ஓம் மகாசக்தி மற்றும் இதுதான்டா போலீஸ் ஆகிய படங்கள் வெளியாகின்றன.செல்வராகவன்

செல்வராகவன்

இதில் செல்வராகவன் வசனம் எழுதியிருக்கும் மாலை நேரத்து மயக்கம், சக்திவேல் வாசுவின் தற்காப்பு மற்றும் இனியாவின் கரையோரம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பேய்கள் ஜாக்கிரதை

பேய்கள் ஜாக்கிரதை

மனோபாலா, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பேய்கள் ஜாக்கிரதை. இந்த புத்தாண்டு தினத்தில் வெளியாகும் பேய்கள் ஜாக்கிரதை தமிழ் சினிமாவில் சற்றே ஓய்ந்து போயிருந்த பேய்களை மீண்டும் மீண்டும் ஆரம்பித்து வைக்கும் என்றே தோன்றுகிறது.


2016 ம் ஆண்டாவது தமிழ் சினிமாவிற்கு லாபகரமான ஆண்டாக அமையுமா? இதற்கான விடை அடுத்த ஆண்டின் இறுதியில் தான் தெரிய வரும்.
English summary
2016:The Following Tamil Movies Malai Nerathu Mayakkam,Tharkappu,Peigal Jaakirathai,Karaiyoram,kodai mazhai, Om Maha Shakti, Idhu Thanda Police and Naalu Peru Naalu Vithama Pesuvanga Release on Coming New Year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil