»   »  2016: ஆஸ்கர் விருதுகள் விழாவில், இந்தியாவை உயர்த்திப் பிடித்த நட்சத்திரங்கள்

2016: ஆஸ்கர் விருதுகள் விழாவில், இந்தியாவை உயர்த்திப் பிடித்த நட்சத்திரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் விழாவில், இந்தியாவின் பங்கு சற்று அதிகமாவே இருந்தது.

விருது வழங்கும் நபராக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா தனது உடையாலும், நகைகளாலும் விழாவிற்கு வந்தவர்களை அதிகமாகவே கவர்ந்தார்.

அதே போல வேறு சிலரும் இந்த ஆஸ்கர் விழாவில், இந்தியாவின் பங்கை உயர்த்திப் பிடித்துள்ளனர்.அவர்களைப் பற்றி இங்கே காணலாம்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நேற்று நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் விருது வழங்கும் நபராக இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இதன் மூலம் இந்திய ரசிகர்கள் பலரையும், ஆஸ்கர் விருதுகள் விழா நிகழ்ச்சிகளை பார்க்க வைத்திருக்கிறார் பிரியங்கா. மேலும் ஆஸ்கர் தொடர்பான கூகுள் தேடல்களில் 2 வது இடத்தையும் பிரியங்கா பெற்றிருக்கிறார். ஆஸ்கர் விழாவில் சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை மார்கரெட் சிக்ஸல்லுக்கு (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்) பிரியங்கா வழங்கியிருந்தார்.

ஆசிப் கபாடியா

ஆசிப் கபாடியா

இதேபோல இந்தோ-பிரிட்டிஷ் வம்சாவளி இயக்குநர் ஆசிப் கபாடியா சிறந்த டாகுமென்டரி(ஏமி) படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றார்.ஆசிப் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரவ் மோடி

நீரவ் மோடி

சிறந்த துணை நடிகைக்கான தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்த கதே வின்ஸ்லெட் அலிசியா விகாண்டேர் தேர்வானதால், ஆஸ்கர் வாய்ப்பை நழுவவிட்டார். எனினும் விழாவில் கதே அணிந்து வந்த இந்திய நகைகள் அனைவரின் பார்வையையும் அவர்மீது திரும்ப வைத்தது. கதேவின் இந்தப் புகழுக்கு இந்திய நகை வடிவமைப்பாளர் நீரவ் மோடியே காரணம். இது குறித்து கதே " நீரவ் மோடியின் நகைகள் புதுமையுடனும், உயர்ந்த படைப்பாற்றலுடனும் திகழ்கின்றன. பெண்மையை வெளிபடுத்தும் நவீன நகைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை"என்று கூறியிருக்கிறார். இந்தியாவின் சிறந்த நகை வடிவமைப்பாளர்களில் ஒருவரான நீரவ் மோடி தனது வியாபாரத்தை மும்பை, டெல்லி தவிர ஹாங்காங், நியூயார்க்கிலும் விரிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டலங்கோ லியோன்

கோட்டலங்கோ லியோன்

இவர்களைத் தவிர கோவையைச் சேர்ந்த கோட்டலங்கோ லியோன் தனது பங்குக்கு திரைப்பட தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று பெருமை சேர்த்துள்ளார். அமெரிக்காவில் உள்ள 'சோனி இமேஜ் ஒர்க்ஸ்' நிறுவனத்தில் லியோன் தற்போது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
2016 Oscar Awards, Related India Celebrities List- Priyanka Chopra, Asif Kapadia, Nirav Modi, Cottalango Leon.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil