»   »  பொங்கல் படங்களுக்கான முன்பதிவு ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லையே!

பொங்கல் படங்களுக்கான முன்பதிவு ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி நாளை ரஜினிமுருகன், கதகளி, தாரை தப்பட்டை மற்றும் கெத்து ஆகிய 4 படங்கள் வெளியாகின்றன.

இவற்றில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இல்லை என்பதால் இந்த 4 படங்களுக்கான வரவேற்பும் சற்றுக் குறைவாகவே இருப்பதாக கூறுகின்றனர்.


இந்தப் படங்களின் முன்பதிவு மற்றும் வரவேற்பு நிலவரங்களை இங்கே பார்க்கலாம்.


ரஜினிமுருகன்

ரஜினிமுருகன்

சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரஜினிமுருகன் தற்போதைய நிலவரப்படி முன்பதிவுப் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறது.பல முறை தள்ளிப் போனாலும் எதிர்பார்ப்பு, முன்பதிவு மற்றும் அதிகத் திரையரங்குகள் என்று எல்லாவற்றிலும் பிற படங்களை முந்துகிறது ரஜினிமுருகன்.


கதகளி

கதகளி

விஷால் - கேத்தரின் தெரசா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கதகளி திரைப்படம் முன்பதிவுப் பட்டியலில் 2 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதல்முறையாக பாண்டிராஜ் ஆக்ஷன் பாதையில் பயணித்து இருப்பதாலும், தரமான கதையைத் தருவார் என்ற ரசிகர்களின் நம்பிக்கையும் சேர்ந்து இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை தக்க வைத்திருக்கின்றன.


தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

இளையராஜாவின் 1௦௦௦ மாவது படம், பாலா -இளையராஜா கூட்டணி என்றாலும் கூட முன்பதிவில் முந்தவில்லை தாரை தப்பட்டை.தற்போதைய நிலவரப்படி முன்பதிவில் 3 வது இடத்தைப் பிடித்திருக்கிறது தாரை தப்பட்டை. கரகாட்ட கலையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


கெத்து

கெத்து

இந்தப் படத்தின் மூலம் உதயநிதி ஆக்ஷன் பாதைக்கு திரும்பியிருக்கிறார் எனினும் முன்பதிவில் கடைசி இடத்தையே பிடித்திருக்கிறது கெத்து. மான் கராத்தே திருக்குமரன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசை பக்கபலமாக அமையும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். இவர்களின் நம்பிக்கை காப்பற்றப்படுமா? முடிவு நாளை தெரியவரும்.


முன்பதிவு மோசம்

முன்பதிவு மோசம்

பொங்கலுக்கு 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்தாலும் கூட முதல் 2 நாட்களைத் தவிர வார விடுமுறை நாட்களில் முன்பதிவு ஒன்றும் சிறப்பாக இல்லை என்றே கூறுகின்றனர். இதனால் இந்த பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் வசூலில் சாதனை படைக்குமா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.


காரணங்கள்

காரணங்கள்

பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாதது, டிவியில் ஒளிபரப்பப்படும் புதிய படங்கள் ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கின்றன என்று தியேட்டர் வட்டாரங்களில் கூறுகின்றனர். இந்த மாதம் முழுவதும் வேறு பெரிய படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை என்பது சாதகமாக அமைந்தாலும் அதுவரை தியேட்டர்களில் இந்தப் படங்கள் தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது.இதற்கான விடை இன்னும் 24மணி நேரங்களில் தெரிந்து விடும்.


English summary
Sivakarthikeyan's Rajinimurugan, Vishal's Kathakali, Bala's Tharai Thappattai and Udhayanidhi Stalin's Gethu Tomorrow Released on Pongal Festival. Now the 4 Movies Reservation Status Revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil