»   »  தமிழ் சினிமா 2017: விநியோக முறையில் வெற்றி பெற்ற படங்கள்!

தமிழ் சினிமா 2017: விநியோக முறையில் வெற்றி பெற்ற படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்த ஆண்டின் டாப் 10 தமிழ் சினிமா!- வீடியோ

அடிக்கிற காற்றில் அம்மி கல் பறப்பதை போன்று முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் இன்றைய சூழலில் புதுமுகங்கள், குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களை விநியோகஸ்தர்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

முன்ணனி நிறுவனங்கள் தயாரிக்கும் இதுபோன்ற படங்களை திரையிட தியேட்டர்கள் எளிதில் கிடைக்கும். புதிய தயாரிப்பாளர்கள் படங்களின் நிலைமை மிக மோசம்.

மீசைய முறுக்கு

மீசைய முறுக்கு

இவற்றையெல்லாம் கடந்து ஒவ்வொரு ஆண்டும் சில படங்கள் வெற்றி பெறுவது உண்டு. இசையமைப்பாளர் ஹிப் ஆப் தமிழா நாயகனாக அறிமுகமான படம் மீசைய முறுக்கு. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படம் இளைஞர்களை கவரும் விதமாக இருந்ததால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

ஹரஹர மஹாதேவகி

ஹரஹர மஹாதேவகி

ஹரஹர மஹாதேவகி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். இரட்டை அர்த்த வசனங்கள் படம் முழுக்க பேசப்பட்டன. இன்றைய இளைஞர்கள் ஜாலியாக பொழுதுபோக்கு படமாக கண்டு களித்ததால் கல்லா நிரம்பியது. இரண்டு படத்தையும் குடும்பங்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கவில்லை என்பது மக்கள் குறிப்பிடத்தக்கது. இப்படங்களை தமிழ்ப் பட தயாரிப்பில் முன்ணனி நிறுவனங்களான அவ்னி சினிமேக்ஸ் (நடிகை குஷ்பூ நிறுவனம்), ஸ்டுடியோ கிரீன் (ஞானவேல்ராஜா) தயாரித்திருந்ததால் தியேட்டர்கள் எளிதாக, கூடுதலாக கிடைத்தன.

மரகத நாணயம்

மரகத நாணயம்

மரகத நாணயம், மாநகரம் படைப்பு ரீதியாக பாராட்டை பெற்ற படங்கள் புதியவர்கள் தயாரித்த படம். மாநகரம் நகர்புறங்களில் வசூலை பார்த்தது. மரகத நாணயம் தமிழ்நாடு முழுமையும் பெரும் வசூலை பெறவில்லை என்றாலும் குறைந்தபட்ச வசூலைப் பெற்றது.

முதலுக்கு மோசமில்லை

முதலுக்கு மோசமில்லை

இரு படங்களும் முறையான திட்டமிடல், அவசர கோலத்தில் அனுபவமில்லாதவர்களால் கையாளப்பட்டதால் அதிக தியேட்டர்களில் திரையிடப்படவில்லை. இருப்பினும் முதலுக்கு மோசமில்லை.

-தொடரும்...

English summary
List of Tamil hits in 2017 based on distribution method of releasing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X