»   »  2017... இது ரஜினி தீபாவளி!

2017... இது ரஜினி தீபாவளி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. சினிமா ஆர்வலர்களுக்கும் கூட ரஜினி படங்கள் வெளியாகும் நாளில் ஒரு திருவிழா மனநிலை வந்துவிடும்.

சிவாஜி, எந்திரன், கபாலி படங்கள் வெளியான நாட்களில் மாநிலமே வெறிச்சோடிக் கிடந்தது. பெரும்பாலான மக்கள் திரையரங்குகளை மொய்த்துக் கிடந்தனர். சென்னையில் கபாலி ரிலீஸ் அன்று அறிவிக்கப்படாத விடுமுறை தினமாகக் காட்சியளித்தது. பல தனியார் நிறுவனங்கள் கபாலிக்காக ஸ்பெஷல் விடுமுறை அளித்தன, அதுவும் சம்பளத்துடன்.


2017... It is Rajini Diwali all over the Globe!

இதெல்லாம் ரஜினி படங்களுக்கு மட்டுமே நடக்கும் அதிசயம்.


இதோ ரஜினியின் அடுத்த மெகா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.


ஆம்... ஷங்கர் இயக்கி வரும் 2.0 படம் வரும் தீபாவளிக்கு வெளியாகப் போகிறது. 2017-ம் ஆண்டு தீபாவளி அக்டோபர் 19-ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அந்த நாளில்தான் 2.0 படமும் வெளியாகும் எனத் தெரிகிறது.


இந்த தீபாவளிக்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின. அதற்கே தியேட்டர் பற்றாக்குறை.


எனவே 2017 தீபாவளிக்கு 2.0 படத்துடன் மோதும் அளவுக்கு வேறு படங்கள் ஏதுமில்லை. வந்தாலும் எப்பேற்பட்ட பாதிப்பைச் சந்திக்க வேண்டி வரும் எனத் தெரியும். எனவே சோலோவாக இந்தியா முழுவதும் 2.0 ரிலீசாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


3 டியில் தலைவர் படம்... தீபாவளி... உலகெங்கும் மெகா ரிலீஸ்... ரசிகர்கள் இப்போதே கவுன்ட் டவுனை ஆரம்பித்துவிட்டார்கள்.

English summary
Superstar Rajinikanth's 2.0 has been scheduled for Diwali 2017 worldwide release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil