2020ம் ஆண்டின் டாப் 5 தமிழ் வெப் சீரிஸ்..அதிக ரசிகர்களை கவர்ந்தது எது?

சென்னை: தமிழிலும் தற்போது வெப் சீரிஸ்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்த ஆண்டிலும் தமிழில் சில வெப் சீரிஸ்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் டாப் 5 இடங்களை பிடித்த வெப் சீரிஸ் என்னென்ன என்பதன் விவரம் இதோ

க்ரைம் கதை

க்ரைம் கதை

ஸ்ரீராம் ராம் இயக்கத்தில் கார்த்திக் ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் Zee5 Original வெப் சீரிஸ்ஸாக வெளிவந்தது முகிலன். விஷால் சந்திரசேகரன் இசை அமைத்திருந்தார். கேங்ஸ்டரை மையமாக கொண்ட க்ரைம் கதைகளமாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. டாப் 5ல் இந்த வெப் சீரியஸ் 5வது இடத்தை பிடித்துள்ளது.

ஹாரர் கதை

ஹாரர் கதை

அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் ஷம்னா கசிம், அம்ஷத், விவேக் பிரசன்னா நடிப்பில் Zee5 Original வெப் சீரிஸ்ஸாக வெளிவந்தது கண்ணாமூச்சி. சுந்தரமூர்த்தி இசை அமைத்திருந்தார். குழந்தைகள் வன்கொடுமையை மையமாக கொண்டு ஹாரர் கதைகளமாக வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்றது. டாப் 5ல் இந்த வெப் சீரிஸ் 4வது இடத்தை பிடித்துள்ளது.

காமெடி கதை

காமெடி கதை

சுப்பு இயக்கத்தில் பரத், பிரியா பவானி ஷங்கர், ரோபோ ஷங்கர், கருணாகரன் நடிப்பில் Amazon Prime வெப் சீரிஸ்ஸாக வெளிவந்தது டைம் என்ன பாஸ். மேட்லே ப்ளூஸ் இசை அமைத்திருந்தார். காலம் கடந்து வந்தவர்களை மையமாக வைத்து காமெடி கதைகளமாக வெளிவந்து மிக சிறந்த வரவேற்பை பெற்றது. டாப் 5ல் இந்த வெப் சீரிஸ் 3வது இடத்தை பிடித்துள்ளது.

காமெடி கதை

காமெடி கதை

சாருகேஷ் சேகர் இயக்கத்தில் ஜெய், வாணி போஜன், மாதுரி நடிப்பில் Hotstar Special வெப் சீரிஸ்ஸாக வெளிவந்தது ட்ரிபில்ஸ். விஷால் சந்திரசேகரன் இசை அமைத்திருந்தார். இரண்டு கல்யாணம் மூன்று நண்பர்கள் என ரொமான்ஸ் - காமெடி கதைகளமாக வெளிவந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. டாப் 5ல் இந்த வெப் சீரிஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் இடம்

முதல் இடம்

வெற்றிமாறன், சுதா கொங்காரா, கவுதம் மேனன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சாய்பல்லவி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, அஞ்சலி, சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் Netflix ல் வெளிவந்தது பாவ கதைகள். ஆணவ கொலைகளை மையமாக கொண்ட 4 கதைகளாக வெளியாகி இந்த ஆண்டின் சிறந்த வெப் சீரிஸ்ஸாக முதல் இடத்தில் உள்ளது பாவ கதைகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X