Don't Miss!
- News
"கேட்டுச்சா".. பாஜக வாயே திறக்கலயே.. வேங்கைவயல் விஷயத்தில் ஏன் ஒருத்தரும் கைதாகல? சீறும் திருமாவளவன்
- Lifestyle
உங்க ழுழங்காலில் இந்த அறிகுறிகள் இருந்தா... அது ஆபத்தானதாம்...உங்களால நடக்க முடியாம கூட போகலாமாம்!
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Finance
ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. 20 சதவீதம் வரையில் சரிவு..!
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
2020ம் ஆண்டின் டாப் இயக்குனர் கவுதம் மேனன்.. நடிப்பு இயக்கம் இரண்டிலும் முன்னிலை!
சென்னை: இந்த ஆண்டில் அதிகபடியான படங்களை ரிலீஸ் செய்ததில் நடிகராகவும், இயக்குனராகவும் கவுதம் மேனன் முன்னிலை வகிக்கிறார்.
ட்ரான்ஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே, தீவிரம், பாவக்கதைகள் (வான் மகள்) என இந்த வருடத்தில் 5 படத்தில் நடித்துள்ளார்.
இன்னமும் திருந்தாத ரியோ.. ஆரி மீது அப்படியொரு கோபம்.. இவங்களாம் குரூப்பா பேசி திட்டமே போடலையாம்!
புத்தம் புது காலை (அவளும் நானும்), பாவக்கதைகள் (வான் மகள்) ஆகிய படங்களை இந்த வருடத்தில் இயக்கி உள்ளார் கவுதம் மேனன்.

வழக்கம் போல நல்ல வரவேற்பு
புத்தம் புது காலை (அவளும் நானும்), பாவ கதைகள் (வான் மகள்) என இரண்டு படங்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளையும் பெற்றது. இரண்டும் குறும் படமாக இருந்தாலும் அதன் மூலம் கவுதம் மேனன் சொல்ல வந்த விஷயங்கள் ரசிகர்கள் மனதில் நன்றாக பதியும் படி கூறியுள்ளார்.

தரமான சம்பவம்!
ட்ரான்ஸ் திரைப்படத்தில் வில்லனாகவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் போலீஸாகவும் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார் கவுதம் மேனன். இந்த இரண்டு கதாபாத்திரமும் ரசிகர்களிடத்தில் பெரிதும் பேசப்பட்டு ரசிக்கப்பட்டது. பாவ கதைகள் (வான் மகள்) படத்தில் தந்தையாக தனித்துவமான கதாபாத்திரமாக இருந்தார் கவுதம் மேனன்.

ஓ மை கடவுளே
ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கவுதம் மேனனின் தீவிர ரசிகர் ஆவார். படத்தை கவுதம் மேனனின் வாய்ஸ் ஓவர் உடன் தொடங்கி இருப்பார். அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன் நடித்தும் இருப்பார். கவுதம் மேனனின் ஸ்டைலை போல அஸ்வத் மாரிமுத்து ஒரு ஸ்டைலை உருவாக்க ஓ மை கடவுளே இந்த ஆண்டின் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

வெற்றி தொடருமா
இந்த ஆண்டு கவுதம் மேனனுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. அடுத்த ஆண்டில் என்னென்ன படத்தில் நடிப்பார் என்ற ஆர்வம் ரசிகர்களிடத்தில் உள்ளது. துருவ நட்சத்திரம், ஜோஷ்வா இமை போல் காக்க என இரண்டு முக்கியமான திரைப்படங்கள் அவரின் இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளிவர உள்ளது. இது தவிர்த்து சில வெப் சீரியஸ்களிலும் கமிட் ஆகி உள்ளார் கவுதம் மேனன்.