twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மது விளம்பரத்தில் நடிப்பதா?-மலையாள நடிகர்களுக்கு கண்டனம்

    By Sudha
    |

    மது விளம்பரங்கள், நகைக் கடை விளம்பரங்களில் நடிகர்கள் தோன்றுவதற்கு கேரள சட்டசபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து இன்று கேரள சட்டசபையில் சிபிஎம் உறுப்பினர் பி.விஸ்வம் பேசுகையில், பல முன்னணி மலையாள நடிகர்கள், மது விளம்பரங்கள், நகைக் கடை விளம்பரங்களில் தோன்றி நடிக்கிறார்கள். மது பான நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசடர்களாக தோன்றுகின்றனர். நகைக் கடைகளுக்கும் பிராண்ட் அம்பாசடர்களாக உள்ளனர்.

    இப்படி மதுவையும், நகைகளையும் விளம்பரப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை மலையாள நடிகர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

    அவரது கருத்தை முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான கார்த்திகேயனும் ஒப்புக் கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

    கார்த்திகேயன் பேசுகையில், ஒரு நடிகர், ஒரு குறிப்பிட்ட நகைக் கடையிலேயே நகைகளை வாங்குமாறு கூறி விளம்பரத்தில் பேசுகிறார். அதேபோல அவர் பிராண்ட் அம்பாசடராக இருக்கும் ஒரு நிதி நிறுவனத்திற்கு ஆதரவாக, அந்த நிறுவனத்திலேயே நகைகளை டெபாசிட் செய்யுமாறும் கூறுகிறார். இதெல்லாம் மக்களை தவறான பாதையில் திசை திருப்பும் செயல்களாகும் என்றார்.

    English summary
    The appearance of some top Malayalam actors in advertisements endorsing liquor and gold came in for sharp criticism in the Kerala Assembly today. Raising the issue during the question hour, CPI(M)"s P Viswan sought to know if it was morally correct on the part of the actors to promote liquor and gold by becoming brand ambassadors for distilleries and jewellers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X