For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திமுகவிலிருந்து நடிகர் தியாகு விலகல்!

  By Chakra
  |

  Thiyagu
  சென்னை: திமுகவிலிருந்து விலகுவதாக நடிகர் தியாகு அறிவித்துள்ளார்.

  நிருபர்களிடம் அவர் கூறுகையில், 1984-ல் திமுகவில் இணைந்தேன். ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன். தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்காக பம்பரமாய் சுற்றி பிரசாரம் செய்துள்ளேன். ஆனால் என் உழைப்புக்கு இன்று வரை எந்த வித அங்கீகாரமும் அளிக்கப்படவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்துள்ளேன்.

  எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பதவி பெற்றுள்ளனர். கட்சியில் இல்லாதவர்கள் கூட திமுக தலைவரை துதி பாடியே பல்வேறு பதவிகளையும், வசதி வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர். நான் 33 ஆண்டுகளாக நடிகனாக இருக்கிறேன். என் சொந்த முயற்சியால் சினிமாவில் பெயரும் புகழும் சம்பாதித்தேன்.

  நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வரவில்லை. எனது தாத்தா சங்கீத கலாநிதி, இசை பேரறிஞர் கும்பகோணம் வயலின் ராஜ மாணிக்கம் பிள்ளை ஆவார்.

  எங்கள் வீட்டுக்கு தாத்தாவை பார்க்க பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், மூப்பனார் போன்றோரெல்லாம் வந்துள்ளனர். அப்படிப்பட்ட நான் கருணாநிதியின் வசனத்திலும், பேச்சிலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தேன்.

  என் தாத்தா ராஜ மாணிக்கம் பிள்ளையின் தபால் தலையை வெளியிட்டு, கும்பகோணத்தில் ஒரு தெருவிற்கு அவர் பெயர் சூட்ட வேண்டுமென முதல்வராக இருந்த கருணாநிதியிடம் மூப்பனார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அரசு ஏற்பாடு செய்யும் என கருணாநிதி உறுதிமொழியும் அளித்தார். அந்த வாக்குறுதியை பிறகு மறந்து விட்டார். இதனால் நான் விம்மி அழுதேன்.

  இதிலிருந்து நீங்கள் என்னை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள் என்பது புரிந்து விட்டது. இதுவரை கட்சியில் இருந்தது தவறு என்று புரிந்து கொண்டுள்ளேன். எனவே கடந்த 19ம் தேதி முதல் கட்சியிலிருந்து விலகி கொண்டுள்ளேன். எனது விலகல் கடிதத்தை கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்பேன்.

  சினிமாவில் இருந்து திமுகவுக்கு வந்த எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். ராஜேந்திரன் என எல்லோரும் மனம் காயம்பட்டுதான் வெளியே சென்றார்கள்.

  சமீபத்தில் வந்த வடிவேலுவும் படங்கள் இன்றி நடுத்தெருவில் நிற்கிறார். அதிமுகவிலோ ராதாரவி எம்.எல்.ஏ ஆனார். ராமராஜன் எம்.பி. ஆக்கப்பட்டார். ஐசரி வேலனுக்கு மந்திரி பதவி கிடைத்தது. இன்று சி.ஆர்.சரஸ்வதி வாரியத் தலைவராக இருக்கிறார். அந்தக் கட்சியில்தான் சினிமாகாரர்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது.

  தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி வருகிறார் என்றார்.

  நீங்கள் அதிமுகவில் சேரப் போகிறீர்களா என்று கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார் தியாகு.

  English summary
  Actor Thiyagu has come out of DMK since the party doesn't give any importance to him. Thiyagu is deeply hurt by the parties callousness.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X