twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தாவிட்டால் போராட்டம் தொடரும்!'

    By Shankar
    |

    சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு உடனடியாகத் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தின் அதிருப்தியாளர்கள் பிரிவு அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த ராம.நாராயணன், செயலாளராக இருந்த சிவசக்தி பாண்டியன் ஆகியோர் ராஜிநாமா செய்தனர். இதையடுத்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்கு தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. தலைமையிலான குழு, கடும் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டுமென சில நாள்களாக வலியுறுத்தி வந்தது.

    இந்நிலையில் அக்குழுவின் செயற்குழு வெள்ளிக்கிழமை (மே 20) அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. தயாரிப்பாளர் கேயார் தலைமையில் சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில், 'தயாரிப்பாளர் சங்கத்துக்கு முறைப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். திடீர் தலைவராக வலம் வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் பலரை மிரட்டி வருகிறார். அவரது போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ஊழல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந் நிலையில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு உட்பட்டு நடப்பேன், நான் தாற்காலிக தலைவர் மட்டுமே, என்றார்.

    English summary
    A faction of Producers urged the council office bearers to conduct fresh elections for the Council.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X