»   »  'காலம் என் காதலி'யைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த அதிரடி

'காலம் என் காதலி'யைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 24 படத்தின் இசை வெளியீடு வருகின்ற 28 ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 24. சூர்யா 4 விதமான தோற்றங்களில் நடித்திருக்கும் இப்படத்தை விக்ரம் குமார் இயக்கியிருக்கிறார்.


சமீபத்தில் வெளியான காலம் என் காதலி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


இசை வெளியீடு

இசை வெளியீடு

சூர்யா நடிப்பில் நீண்ட நாட்கள் கழித்து வெளியாகும் படம் 24. இப்படத்தின் இசை வெளியீடு வருகின்ற 28 ம் தேதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுத எழுத்து, சில்லுன்னு ஒரு காதல் படங்களுக்குப் பின் சூர்யா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இதனால் இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹைதராபாத்

ஹைதராபாத்

சூர்யாவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் இப்படம் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக இப்படத்தின் இசை வெளியீட்டை பிரமாண்டமாக ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். மேலும் இசை விழாவில் டோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


காலம் என் காதலி

காலம் என் காதலி

சமீபத்தில் வெளியான காலம் என் காதலி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வைரமுத்துவின் வரிகளை+பென்னி தயாள் குரல் இவற்றுடன் ரகுமானின் இசையும் சேர்ந்து ரசிகர்களை மயக்கியிருக்கிறது. இதனால் படத்தின் இசை வெளியீடை தமிழ், தெலுங்கு என 2 மொழி ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
பாடல்கள்

பாடல்கள்

இப்படத்தின் பாடல்கள் வரிசையை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.


English summary
Sources Said March 28th Surya's 24 Audio Launch Held in Hyderabad.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos