படம் எடுப்பதாக மோசடி: கைதாவாரா இயக்குநர் களஞ்சியம்?

திரைப்படம் எடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றிய புகாரில் இயக்குநர் களஞ்சியம் கைதாகக் கூடும் எனத் தெரிகிறது.

பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும் போன்ற படங்களை இயக்கியவர் களஞ்சியம். இவர் திருவண்ணாமலை வாழைசித்தர் அறக்கட்டளை தலைவராகவும் உள்ளார்.

சீனிவாசன் என்பவருடன் இணைந்து சிவகுரு பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி என் உயிர் நீதானடி என்ற திரைப்படம் எடுப்பதாக பூஜை போட்டார்.

பின்னர் பணப் பற்றாக்குறை காரணமாக, இந்த திரைப்படம் எடுப்பதற்கு பங்குதாரர்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளனபர். இதை நம்பி 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தலா ரூ.50,000 பங்குத் தொகையாக சீனிவாசன் மற்றும் களஞ்சியத்திடம் கொடுத்துள்ளனர்.

ஆனால் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியவர்கள், பின்னர் அதுபற்றி எந்த விவரமும் சொல்ல மறுத்து வருகிறார்களாம். பணத்தைத் திருப்பிக் கேட்டவர்களுக்கு அதைத் தராமல் இழுத்தடிப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் இரு வாரங்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர்.

இந்தப் புகாரின் பேரில் பட தயாரிப்பாளரான சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் இயக்குநர் களஞ்சியமும் தனது பங்குதாரர் என்றும், அவருக்கும் இதில் பங்குண்டு என்றும் கூறியதாகத் தெரிகிறது. எனவே களஞ்சியமும் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X