»   »  திருட்டு வீடியோ, விமர்சனங்களைத் தாண்டி அமெரிக்காவில் வசூல் குவிக்கும் 24!

திருட்டு வீடியோ, விமர்சனங்களைத் தாண்டி அமெரிக்காவில் வசூல் குவிக்கும் 24!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பக்கம் திருட்டு வீடியோ, தியேட்டரிலேயே பிரிண்ட் எடுக்கும் களவாணித்தனம், இன்னொரு பக்கம் விமர்சனங்கள்...

இவை அனைத்தையும் தாண்டி வசூலில் 'நிற்கிறது' சூர்யாவின் தெறி.


அமெரிக்காவில்

அமெரிக்காவில்

குறிப்பாக வட அமெரிக்காவில் இந்தப் படம் இதுவரை எந்த சூர்யா படமும் வசூலிக்காத அளவுக்கு 1.5 மில்லியன் டாலர்கள் அதாவது 10.08 கோடிகளைக் குவித்துள்ளது. 24 படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளின் மொத்த வசூல் இது.


சூர்யா

சூர்யா

சூர்யா இப்போது தன் மனைவி ஜோதிகாவுடன் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் இப்போது அமெரிக்காவில் இருப்பதுதான் இந்த வசூலுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.


திருப்தி

திருப்தி

சூர்யாவின் சொந்தப் பட நிறுவனத்தின் தயாரிப்பில் வந்துள்ள இரண்டாவது படம் இந்த 24. இந்தப் படம் சூர்யாவுக்கு பெரிய அடியாக அமையும் என்று பலரும் கூறிய நிலையில், அவருக்கு நல்ல லாபத்தைத் தந்துள்ளது. அத்துடன் இன்னும் தியேட்டர்களில் நல்ல கூட்டத்துடன் ஓடிக் கொண்டுள்ளது.


எஸ் 3

எஸ் 3

சூர்யாவின் அடுத்த படம் ஹரி இயக்கத்தில் எஸ் 3. 24 படத்தின் வெற்றி, எஸ் 3க்கு பெரிய ஓபனிங்கை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பெற்றுத் தரும் என நம்புகிறார் சூர்யா.


English summary
Suriya’s ‘24’ is minting huge money at the box office and trade reports have registered a gross of more than 1.5 million USD (10.08cr) in North America.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil