»   »  மீண்டும் தள்ளிப்போன சூர்யா டீசர், ரசிகர்கள் ஏமாற்றம்

மீண்டும் தள்ளிப்போன சூர்யா டீசர், ரசிகர்கள் ஏமாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடிப்பில் நீண்டு கொண்டே போகும் 24 படத்தின் டீசர் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 24. யாவரும் நலம் புகழ் விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் அறிவியல் கலந்த திகில் படமாக உருவாகியிருக்கிறது.

24 Movie Teaser Release Again Delay

முன்னதாக இந்தப் படத்தின் டீசரை இன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் டீசரில் கிராபிக்ஸ் உள்ளிட்ட வேலைகள் முடியவில்லையாம்.

இதனால் மீண்டும் இப்படத்தின் டீசர் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்துவிட்டது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள்படி மார்ச் முதல் வாரத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று தெரிகிறது.

சூர்யா பயங்கரமாக தனது உடலை வருத்தி நடித்திருப்பதால் இப்படத்தின் டீசரை, அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

1 நிமிடம் 20 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Surya's Much-Awaited 24 Movie First Look Teaser, Released on March 1st Week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil