»   »  சூர்யாவின் '24' திருட்டு சிடிக்கு முன்னணி திரையரங்கம் உடந்தையா?

சூர்யாவின் '24' திருட்டு சிடிக்கு முன்னணி திரையரங்கம் உடந்தையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: '24' படத்தின் திருட்டு சிடி விவகாரத்திற்கு முன்னணி தியேட்டர் ஒன்று உடந்தையாக இருந்த விவரம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் கடந்த வாரம் வெளியான '24' படம் உலகம் முழுவதும் இப்படம் வசூலைக் குவித்து வருகிறது.


இந்நிலையில் படம் வெளியான முதல்நாளே இப்படத்தின் சிடி வெளியாகிவிட்டது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.


முதல் நாளே

முதல் நாளே

சூர்யா-சமந்தா நடிப்பில் வெளியான 24 படத்துக்கு முதல்நாளே திருட்டு சிடி வெளியாகி இருக்கிறது. அதைவிட இந்த சிடி பெங்களூரில் உள்ள பிரபலமான தியேட்டர் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூர்

பெங்களூர்

ஒரு படத்தின் திருட்டு சிடியை வைத்து, அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என க்யூப்பில் இருக்கும் தொழில்நுட்பம் மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்த முறையைப் பின்பற்றி '24' படத்தின் திருட்டு சிடி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிந்த படக்குழு அதிர்ச்சியில் உறைந்து போனது. படக்குழுவின் அதிர்ச்சிக்குக் காரணம் காரணம் அது பெங்களூரில் உள்ள பிரபலமான தியேட்டர் என்பதுதான்.
தியேட்டர்

தியேட்டர்

இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ''முதல் நாள் காலை 9.45 மணிக்கு இந்தப் படத்தை காப்பி செய்திருக்கிறார்கள். சிடியில் ஒலி&ஒளி எல்லாமே துல்லியமாக உள்ளது. அப்படிப் பார்த்தால் அந்த தியேட்டர் ஆபரேட்டருக்குத் தெரியாமல் படத்தை காப்பி செய்திருக்க முடியாது. தயாரிப்பாளர் சங்கத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்றிருக்கிறேன். இதற்கு மேலும் அந்தத் தியேட்டருக்கு தமிழ்ப்படங்கள் கொடுக்கப்படுமா? என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.


பிரேமம்

பிரேமம்

100 நாள் கழித்து 'பிரேமம்' படத்தின் சிடி வெளியானது அதற்கே கேரளாவில் எல்லோரும் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இங்கே முதல் நாளே சிடி வெளியிடுகிறார்கள்'' என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.


English summary
24 Piracy was Taken From Bangalore Leading Theater. Now Producer Gnanavel Raja Complaint on Producer Council.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil