twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செபி பெயரில் போலி கடிதம்... சிக்கலில் சாய்மிரா!

    By Staff
    |

    Swaminathan
    மும்பை: விதிமுறைகளை மீறி பங்குப் பரிமாற்றம் செய்தது, அதற்கு தோதாக செபியின் (SEBI) லெட்டர் பேடில் போலி கடிதம் காட்டியது போன்ற குற்றச்சாட்டுகளால் பிரமிட் சாய்மிரா நிறுவனம் விழிபிதுங்கி நிற்கிறது.

    பிரமிட் சாய்மிராவின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் கடும வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து மூன்றாவது நாளாக 10 சதவீதத்துக்கும் மேல் விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.

    இதனால் இந்த பங்குகளின் மீதான வர்த்தகத்தை செபி நிறுத்தி வைத்துள்ளது.

    சமீபத்தில் அந்நிறுவனத்தின் தலைவர் பிஎஸ் சாமிநாதன், செபி அமைப்பிடமிருந்து தனக்கு ஒரு அறிவுரைக் கடிதம் வந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். அக்கடிதத்தில், பிரமிட் நிறுவன பங்குகள் மிகவும் குறைந்த விலைக்குப் பரிமாற்றப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைச் சரிகட்டும் வகையில் 20 சதவிகித பங்குகளை ஒரு பங்குக்கு 250 வீதம் செலுத்தி வாங்கிக் கொள்ளுமாறு செபி அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

    ஆனால் செபியோ தான் அப்படியொரு கடிதத்தை எழுதவே இல்லை என மறுத்துவி்ட்டதோடு இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து பிரமிட் நிறுவனமும்., அந்தக் கடிதம் போலியானதாகவும் இருக்கலாம் என்று கூறியது.

    ஆரம்பத்தில் கடிதமே வரவில்லை என கூறிய சாய்மீரா நிறுவன தலைவர் சாமிநாதன், நேற்று அவசர அவசரமாக சென்னையில் நிருபர்களை சந்தித்தார். தங்கள் நிறுவனத்துக்கு எதிராக மிகப் பெரிய சதி நடப்பதாகவும் முதலீட்டாளர்களிடம் அச்சத்தை உருவாக்கி பங்கு விலை சரிவை சில சக்திகள் ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

    செபி, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை மற்றும் போலீஸிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளோம். போர்ஜரி கடிதத்துக்கு செபி அமைப்பின் லெட்டர் பேடு பயன்படுத்தப்பட்டிருப்பதால் சிபிஐயும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சாமிநாதன் கோரியுள்ளார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.551 ஆக இருந்த சாய்மிரா பங்கு விலை இப்போது 88 சதவீதம் சரிந்து, ரூ.61 ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    விலை இதற்கும் கீழே இறங்கியதால் வர்த்தகத்தை முடக்கியது செபி.

    செபியின் கடிதத்தைக் காட்டி சாய்மிரா புரமோட்டர் கொட்டேச்சா வசமிருந்த பங்குகளை வாங்கப் பார்த்தார் சாமிநாதன் என்கிறார்கள்.

    ஆனால் அது போலி என்று அம்பலமாகிவிட்டதால், விசாரணைக்கு உத்தவிட்டுள்ளது செபி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X