»   »  பிரேமம் புகழ் நிவின் பாலியை இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன்

பிரேமம் புகழ் நிவின் பாலியை இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.

24 ஏஎம் ஸ்டுடியோஸின் மூன்றாவது தயாரிப்பான நிவின் பாலி-பிரபு ராதாகிருஷ்ணனின் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.

24AM Studios' Nivin Pauly-Prabhu Radhakrishnan Movie Starts Rolling!

இந்த படத்திற்கான திரைக்கதையை தயாரிப்பாளர் டி. ராஜாவே எழுதியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

24AM Studios' Nivin Pauly-Prabhu Radhakrishnan Movie Starts Rolling!

படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் இந்த மாத துவக்கத்தில் துவங்கின. இது நிவின் பாலி நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் ஆகும். இயக்குனர் பிரபு ராதாகிருஷ்ணன் கனா காணும் காலங்கள் என்ற மெகா சீரியலை இயக்கி தனது கெரியரை துவங்கினார்.

24AM Studios' Nivin Pauly-Prabhu Radhakrishnan Movie Starts Rolling!

பட்டாளம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் சிரிக்காதே ப்ரொமோ பாடலை இயக்கியவர் பிரபு. ரெமோ ப்ரொமோ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

24AM Studios' Nivin Pauly-Prabhu Radhakrishnan Movie Starts Rolling!

இந்நிலையில் அவர் நிவின் பாலியை இயக்கத் தயாராகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The third production venture of 24AM Studios, the Nivin Pauly-Prabhu Radhakrishnan movie, will start rolling in February 2018. Producer D Raja himself, pens the script for the untitled movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil