»   »  எதிர்மறை விமர்சனங்கள்... அழகுராஜாவில் 25 நிமிட காட்சிகள் குறைப்பு

எதிர்மறை விமர்சனங்கள்... அழகுராஜாவில் 25 நிமிட காட்சிகள் குறைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி நடித்த அழகுராஜா படத்திலிருந்து 25 நிமிடக் காட்சிகளை நீக்கி ட்ரிம் செய்துள்ளனர்.

கார்த்தி, சந்தானம், பிரபு, காஜல் அகர்வால், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'அழகுராஜா' படம் தீபாவளிக்கு வெளியானது. இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. படம் மிகவும் நீளமாக இருப்பதாகவும், சில காட்சிகள் நகைச்சுவை என்ற பெயரில் இழுவையாக உள்ளதாகவும் கூறப்பட்டதையடுத்து, இப்படத்தின் 25 நிமிட காட்சிகளைக் குறைத்துள்ளதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு பாடல் காட்சியும், சில வசனங்களும் நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு காட்சிகளை நீக்கிய 'அழகுராஜா' கடந்த ஞாயிறு மாலை முதல் டிஜிட்டல் வசதிகள் கொண்ட அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முதல் இன்னும் பல திரையரங்குகளிலும், வெளிநாடுகளிலும் இந்த காட்சிகளை நீக்கிய புதிய பிரதி திரையிடப்படுகிறது.

English summary
25 minutes scenes chopped from Karthi's Azhaguraja due to negative reviews.
Please Wait while comments are loading...