twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியாவில் ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா

    By Staff
    |

    டெல்லி: 13வது ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது. சென்னை உள்ளிட்ட ஐந்து நகரங்களில் இந்த திரை விழா நடைபெறவுள்ளது.

    ஐரோப்பிய நாடுகளின் தலை சிறந்த படங்கள் பங்கேற்கும் திரைப்பட விழாதான் ஐரோப்பிய திரைப்பட விழா. இதுவரை 12 திரைப்பட விழாக்கள் இந்தியாவில் நடந்துள்ளன. தற்போது 13வது திரைப்பட விழா ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது. 30ம் தேதி வரை இது நடைபெறும்.

    ஏப்ரல் 1ம் தேதி டெல்லியில் தொடங்கும் பட விழா 8ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை கொல்கத்தாவிலும், 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கோழிக்கோட்டிலும், 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை புனேவிலும் இந்தத் திரைப்பட விழா நடைபெறும்.

    பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளன.

    20 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 21 படங்கள் திரை விழாவில் கலந்து கொள்கின்றன. இந்தப் படங்கள் அனைத்தும் பல்வேறு விருதுகளை வாரிக் குவித்தவை ஆகும்.

    ஷார்ட் சர்க்யூட்ஸ் (ஸ்லோவெனியா), ஐ ஆம் (போலந்து), கிட்ஸ் இன் டாஹூட் (ஸ்வீடன்), எப்சி வீனஸ் (பின்லாந்து), வெய்ட்டர் (நெதர்லாந்து), ஆன் தி அதர் சைட் ஆப் தி பிரிட்ஜ் (ஆஸ்திரியா), யெல்லா (ஜெர்மனி), ஆப்டர் தி வெட்டிங் (டென்மார்க்), இட்ஸ் ஸ்பிரிங் இன் பிரேக் எவ்ரி இயர் (செக்), டு சிலபஸ் பிஹைன்ட் (ஸ்லொவோக்), யூ அன்ட் மி (பிரான்ஸ்) ஆகியவை விழாவில் பங்கேற்கும் படங்களில் சில.

    சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, டெல்லி அரசு, இந்தியா ஹேபிடட் சென்டர், கொல்கத்தாவின் நந்தன் மேற்கு வங்க திரைப்பட மையம், கேரள மாநில சலச்சித்திர அகாடமி, தேதிய திரைப்பட ஆவணக் காப்பகம் உள்ளிட்டவை இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    மேலும் அலயன்ஸ் பிரான்காய்ஸ், கோழிக்கோடு மாநகராட்சி, மேக்ஸ் முல்லர் பவன், பிரிட்டிஷ் லைப்ரரி ஆகிவையும் இந்த முயற்சியில் கை கோர்த்துள்ளன.

    ஐரோப்பிய நாடுகளின் கலை, கலாச்சாரம், வாழ்க்கை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இந்த திரைப்பட விழா விளங்கும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை ெதரிவித்துள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X