»   »  ஆசினால் விஜய் படத்துக்கும் தலைவலி!

ஆசினால் விஜய் படத்துக்கும் தலைவலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vijay and Asin
ஆசின் தொடர்ந்து தெனாவெட்டாக பேசிவருவதால் அவரது படங்களைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்து வரும் உலகத் தமிழ் அமைப்புகள் இப்போது ஆசினுடன், விஜய் இணைந்து நடித்து வரும் காவல் காதல் படத்துக்கும் வேட்டு வைக்கக் கிளம்பியுள்ளனர்.

இலங்கையை வைத்து இப்போது சினிமாத்துறையினரும் விளையாட ஆரம்பித்து விட்டனர். ஒரு குரூப், போகலாம் தப்பில்லை என்று பேசி வருகிறது. இன்னொரு குரூப்போ, போகவே கூடாது. போனால் தடை செய்ய வேண்டும் என்று பேசி வருகிறது.

ஆசின் விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தமிழ் திரையுலகம் பெரும் தடுமாற்றத்திலும், குழப்பத்திலும் உள்ளன.

ஆனால் தற்போது உலகத் தமிழ் அமைப்புகள் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கும், தெளிவுக்கும் வந்துள்ளனர்.

ஆசின் நடித்த படங்களைப் புறக்கணிப்போம் என்று இங்கிலாந்து, கனடா, அமெரிக்காவில் பிரபலமான இரு தமிழ் அமைப்புகள் அறிவித்து விட்டன. மலேசியாவிலும் கொதிப்பு எழுந்துள்ளது.

இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் ஆசினுக்கு தடை போட்டு விட்டது. இந்த கூட்டமைப்பின் கீழ் 30 சங்கங்கள் உள்ளனவாம்.

இலங்கைக்கு செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை அமெரிக்காவில் திரையிட விடமாட்டோம் என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள படத்தை காவல் காதல் படத்தைப் புறக்கணிப்போம் என அமெரிகக தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் சித்திக் இயக்கும் படம் காவல் காதல். இதில் அசின் நடித்துள்ளார். இந்தத் தடை அறிவிப்பால் காவல் காதலுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

தமிழப் படங்களுக்கு தமிழகத்தை விட வெளிநாட்டு மார்க்கெட்தான் பெருமளவில் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறது. எனவே விரைவில் நடவடிக்கை எதையாவது எடுப்பார்கள் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil