twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "டைரில குறிச்சுக்கோ.. இந்த நாள்".. 29 ஆண்டுகளைக் கடந்த ரஜினியின் அண்ணாமலை!

    |

    சென்னை : ரஜினி நடித்த அண்ணாமலை படம் ரிலீசாகி இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது.

    1992 ம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்தில் ரஜினி, குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்திருந்தார். பல புதுமைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய படம் இது.

     இன்ஸ்டாவில் கலக்கு வரும் யுவன் சங்கர் ராஜா ! இன்ஸ்டாவில் கலக்கு வரும் யுவன் சங்கர் ராஜா !

    அண்ணாமலை படத்தை முதலில் டைரக்டர் வசந்த் தான் இயக்க போவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பல காரணங்களால் அவர் மாற்றப்பட்டு, சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கினார். இந்த படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்ப்போம்.

    குறுகிய காலத்தில் படப்பிடிப்பு

    குறுகிய காலத்தில் படப்பிடிப்பு

    வெறும் 45 நாட்களில் அண்ணாமலை படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டது. ஹீரோ இன்ட்ரோ பாடலான வந்தேன்டா பால்காரன், அண்ணாமலை அண்ணமாலை ஆகிய பாடல்கள் ஊட்டியில் படமாக்கப்பட்டன.

    அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்

    அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்

    அண்ணாமலை படத்தில் வரும் இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ, மலடா...அண்ணாமலை, நான் சொல்றதையும் செய்வேன்; சொல்லாததையும் செய்வேன் போன்ற பஞ்ச் டயலாக்குகள் இன்றவும் பிரபலம். பின்னர் இதே டயலாக்குகள் பல படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த படத்திற்கான திரைக்கதையை ஷண்முகசுந்தரம் தான் எழுதினார். எம்எல்ஏ ஏகாம்பரம் - அண்ணாமலை இடையேயான காட்சிகளுக்கான டயலாக்கை பாலச்சந்தரே எழுதினார்.

    அண்ணாமலையில் துவங்கிய டிரெண்ட்

    அண்ணாமலையில் துவங்கிய டிரெண்ட்

    ஹீரோவுக்கு மாஸ் அறிமுக பாடல், ஹீரோவுக்கென தனி பேக்கிரவுண்ட் மியூசிக், ஒரே பாடலில் ஏழையாக இருப்பவன் பணக்காரன் ஆவது போன்ற பல டிரெண்ட்களை தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வைத்த பெருமை அண்ணாமலை படத்தை தான் சேரும். இந்த படத்திற்காக உருவாக்கப்பட்ட கிராபிக் டைட்டில் கார்டு அடுத்து வந்த ரஜினியின் வீரா, முத்து, பாஷா போனற பல படங்களில் பயன்படுத்தப்பட்டது. மற்ற பெரிய ஹீரோக்களுக்கும் இதே போன்ற கார்டு உருவாக்கப்பட்டது.

    தாறுமாறு ஹிட்டான படம்

    தாறுமாறு ஹிட்டான படம்

    அண்ணாமலை படம் தொடர்ந்து 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதுவரை எந்த தமிழ் சினிமாவும் படைக்காத சாதனை இது. இதற்கு பிறகு 1995 ல் ரஜினி நடித்த பாட்ஷா படம் தான் முறியடித்தது. அண்ணாமலை படம் பிறகு தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

    மாஸ் டைட்டில் கார்டு

    மாஸ் டைட்டில் கார்டு

    சூப்பர் ஸ்டார் என ப்ளூ டாட்களிலும், ரஜினியின் பெயர் தங்க நிறத்திலும் வருவது போன்று கிராஃபிக்ஸ் செய்து டைட்டில் கார்டு இந்த படத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக தனி பேக் கிரவுண்ட் மியூசிக் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இது டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் ஐடியா. ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தாக்கத்தால் இது உருவாக்கப்பட்டது. இந்த டைட்டில் கிராஃபிக்ஸ் கார்டு உருவாக்க மட்டும் ஒரு மாதம் செலவிடப்பட்டது. முதலில் தன்னை ஓவராக புகழ்வதை போல் உள்ளதாக கூறி ரஜினி இதை விரும்பவில்லை. ஆனால் பட ரிலீசிற்கு பிறகு இது நல்ல வரவேற்பை பெற்றது.

    சூப்பர் ஹிட் பாடல்கள்

    சூப்பர் ஹிட் பாடல்கள்

    இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை வைரமுத்து எழுதி, தேவா இசை அமைத்திருந்தார். இதில் 5 பாடல்களை எஸ்பிபி.,யும், ஒரு பாடலை யேசுதாசும் பாடி இருந்தனர். இந்த படத்தில் ரஜினியின் மாஸ் ஹீரோ இமேஜை உயர்த்துவதற்காகவே வைரமுத்து பல வரிகளை எழுதி இருந்தார். அண்ணாமலை பாடல் ஸ்லோமோஷனில் படமாக்கப்பட்டு, அதற்கு ஏற்றாற் போல் வாய் அசைக்கப்பட்டது. ரெக்க கட்டி பறக்குதடி பாடலும் வயதான பிறகு டூயட் பாடல் வைத்தால் மக்கள் ரசிப்பார்களா என டைரக்டர் யோசித்துள்ளார். பாலச்சந்தர் ஐடியாவின் படி அமைக்கப்பட்டது தான் அந்த பாடல்.

    ரஜினியின் சொந்த டயலாக்

    ரஜினியின் சொந்த டயலாக்

    அண்ணாமலை படத்தில் பாத்ரூமில் பாம்பு நுழையும் காமெடி மிக பிரபலம். இந்த சீனை ரஜினி நடித்த முடித்த பிறகு, மிகவும் பாராட்டிய டைரக்டர், எப்படி இப்படி தத்ரூபமாக நடித்தீர்கள் என ரஜினியிடம் கேட்டார். அதற்கு ரஜினி, நான் நடிக்கவில்லை. பாம்பு பயத்தால் நிஜமாக முகத்தில் தோன்றிய எக்ஸ்பிரஷன் அது என்றார். அந்த சீனில் ரஜினி சொல்லும், கடவுளே...கடவுளே டயலாக்கும் அவர் சொந்தமாக பேசியது. அந்த டயலாக்கே பொருத்தமாக இருந்ததால் டைரக்டரும் பயன்படுத்தி விட்டார்.

    English summary
    29 years of Annamalai...Rajini fans and celebrities shared their memories
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X