சூர்யா 41 பட டைட்டில் "வணங்கான்"...பாலா பிறந்தநாள் ட்ரீட்டாக அறிவிப்பு

சென்னை : டைரக்டர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா நடித்து வரும் படத்திற்கு சூர்யா 41 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிதாமகன் படத்திற்கு பிறகு சூர்யா - பாலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

Recommended Video

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் | ஜெயமோகனின் கதை? *Entertainment

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் கன்னியாக்குமரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யா மீனவர் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது.

விக்ரம், ராக்கெட்ரி என வரிசையாக சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து வரும் படங்கள் கவனத்தை ஈர்த்து, ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,பாலா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்கிறார் என்ற சூர்யா 41 படமும் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது.

பரபரப்பை கிளப்பிய சூர்யா 41

பரபரப்பை கிளப்பிய சூர்யா 41

சூர்யா 41 படத்தில் இருந்து பாலா நீக்கப்பட்டார், சூர்யா 41 படம் பாதியில் கைவிடப்பட்டது, சூர்யா - பாலா இடையே கருத்து வேறு என பல வதந்திகள் கிளம்பி பரபரப்பாக்கை கிளப்பிய சூர்யா 41 படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் கோவாவில் நடப்பதாக படக்குழுவே அறிவித்திருந்தது. இங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆர்வத்தில் ரசிகர்கள்

ஆர்வத்தில் ரசிகர்கள்

சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடக்கிறது. ஆனால் இதுவரை படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இது வழக்கமான பாலா படம் கிடையாது வித்தியாசமான, மாஸான படமாக இருக்க போகிறது என சொல்லி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருவதால், படம் எப்போ வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பாலாவை மறந்துட்டீங்களே பாஸ்

பாலாவை மறந்துட்டீங்களே பாஸ்

இதற்கிடையில் இம்மாதம் 22 ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் வர உள்ளதால், பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரீட்டாக சூர்யா 41 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் என ஏதாவது ஒரு அப்டேட் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.ஆனால் சூர்யா பிறந்தநாளுக்கு முன் டைரக்டர் பாலாவிற்கு பிறந்தநாள் என்பதை ரசிகர்கள் மறந்தே விட்டார்கள்.

சூர்யா 41 அப்டேட்

சூர்யா 41 அப்டேட்

ஆமாம். இன்று டைரக்டர் பாலாவின் பிறந்தநாள். இதை கொண்டாடும் விதமாக, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சூர்யா 41 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இது படத்தின் டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட்லுக்காக இருக்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்திருந்தார்கள்.

சூர்யா 41 டைட்டில் இதுதான்

சூர்யா 41 டைட்டில் இதுதான்

ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே, நீண்ட தாடியுடன் இருக்கும் சூர்யாவின் பாதி முகம் கோணி பையால் மறைக்கப்பட்டதை போன்ற ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் சூர்யா 41 படத்தின் டைட்டில் வணங்கான் என்ற அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. அதோடு, உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...! என குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கில் என்ன டைட்டில்

தெலுங்கில் என்ன டைட்டில்

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிடப்பட உள்ளதையும் மறைமுகமாக தெரிவித்துள்ளனர். தெலுங்கில் இந்த படத்தில் அச்சலுடு என பெயரிடப்பட்டுள்ளது.தெலுங்கு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்த தகவலால் #Suriya, #Suriya41, #VaadiVasal, #DirBala , #வணங்கான் #Vanangaan #Achaludu போன்ற ஹேஷ்டேக்குகளை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள். சூர்யா மற்றும் சூர்யா 41 படம் பற்றிய பல தகவல்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X