»   »  '2.ஓ' படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் ரிலீஸ்!

'2.ஓ' படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் துபாயில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த இசை வெளியீட்டின் போது படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களில் இரண்டு பாடல்களை மட்டுமே வெளியிட்டார்கள்.

மதன் கார்க்கி எழுதிய 'எந்திர லோகத்து சுந்தரியே'.... மற்றும் 'ராஜாளி'...ஆகிய இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.

 மூன்றாவது பாடல்

மூன்றாவது பாடல்

மூன்றாவது பாடலான மறைந்த நா.முத்துக்குமார் எழுதிய 'புல்லினங்காள்...' என்ற பாடலை அப்போது வெளியிடவில்லை. அந்தப் பாடலுக்கான இசை வேலைகள் முழுவதுமாக முடியவில்லை என்பதால் அப்போது வெளியிட முடியவில்லை என்றார்கள்.

 விரைவில் வெளியீடு

விரைவில் வெளியீடு

விரைவில் 'புல்லினங்காள்...' பாடலை வெளியிட உள்ளார்களாம். பறவைகள் மேல மனிதன் கொண்ட காதல்தான் அந்தப் பாட்டு. பறவைகளுக்காக மனிதனின் குரலாக அந்தப் பாட்டு ஒலிக்கும் எனக் கூறியுள்ளார்கள்.

 அழகான வரிகள்

அழகான வரிகள்

"ரொம்ப அழகான வரிகள், அழகான சொற்கள். முத்துக்குமார் அவர்களோட வரிகள் இந்தப் படத்துல இருக்கிறது கூடுதல் சிறப்பு. இந்தப் படத்துல நானும் பங்கெடுத்துக்கறது மகிழ்ச்சியாக இருக்கு" எனக் கூறியிருக்கிறார் மதன் கார்க்கி.

 கடைசி பாடல் அல்ல

கடைசி பாடல் அல்ல

'2.O' படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய 'புல்லினங்காள்...' பாடல்தான் அவர் எழுதிய கடைசி பாடல் என்ற ஒரு தவறான கருத்து இருக்கிறது. ஆனால், நா.முத்துக்குமார் அதற்குப் பிறகும் சில பாடல்களை எழுதியிருக்கிறாராம். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Only two songs were released in three of the songs in the film during'2.O' music release. 'Pullinangaal...' song written by Na.Muthukumar will be released soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil